நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி இரா.பெரியதுரை யின் 11ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (25.3.2026) ‘விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ.1000த்தை அவரது மகன் வழக்குரைஞர் பெ.பாண்டியத்துரை வழங்கினார்.
“பெண்களே பேரண்டத்தின் அச்சாணி” பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நெகிழ்ச்சியான இருபெரும் விழாக் கொண்டாட்டம்!
திருச்சி, மார்ச் 25- பெண் விடுதலைக்காகவும், சமூகச் சமத்துவத்திற்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்த சமூகப் புரட்சியாளர் அன்னை மணியம்மையாரின் பிறந்தநாள் மற்றும் பன்னாட்டு மகளிர் தினம் ஆகியவற்றை முன்னிட்டு, திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 10.03.2026…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள்!’ தி டைம்ஸ் ஆப் இந்தியா’ பாராட்டு!
‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’வில் (24.3.2026)சிறப்புக் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையத்தக்க பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருவதை உரிய எடுத்துக்காட்டுகளுடன் அந்தக் கட்டுரை படம்…
செய்தியும் சிந்தனையும்…
கரிசனையோ? செய்தி: இனி வருவது சோதனை காலம் ஒன்றிய மாநில அரசுகள் ஒன்றி ணைந்து செயல்பட்டால் நெருக்கடியை எதிர்கொள்ள முடியும் – பிரதமர் மோடி பேச்சு. சிந்தனை: சோதனை என்று வரும்பொழுது தான் மாநிலங்கள் மீது கரிசனையோ?
மார்ச் 28, பட்டுக்கோட்டையில் சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் தளபதி பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி 77-ஆம் ஆண்டு நினைவு நாள் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும்… வாக்காளர் கடமையும்… திராவிடர் கழக பரப்புரைக் கூட்டம்
நாள் : 28.03.2026 சனிக்கிழமை, மாலை 6.00 மணி இடம் : அஞ்சாநெஞ்சன் அழகிரி சிலை எதிரில், பட்டுக்கோட்டை வரவேற்புரை: கா.தென்னவன் (மாவட்டச் செயலாளர்) தலைமை: பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்டக் காப்பாளர்) முன்னிலை : மு.அய்யனார் (தஞ்சை மாவட்ட காப்பாளர்) அரு.நல்லதம்பி…
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஆயுள் காப்பீடு மறுப்பு அய்.ஆர்.டி.ஏ.அய்-க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!
புதுடில்லி, மார்ச் 25 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு ஆயுள் காப்பீடு வழங்க மறுக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து, 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திற்கு (IRDAI) தேசிய மனித உரிமைகள் ஆணையம்…
சமையல் எரிவாயுவுக்கு மாற்றாகிறதா எத்தனால்? ஒன்றிய அரசின் புதிய இலக்கு – பின்னணியில் அம்பானிகளா?
புதுடில்லி, மார்ச் 25 இந்தியாவின் சமையல் எரிவாயு (LPG) இறக்குமதி சுமையைக் குறைக்கும் நோக்கில், எத்தனாலை ஒரு முதன்மை சமையல் எரிபொருளாக மாற்ற ஒன்றிய அரசு தீவிர நட வடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கான பிரத்யேக அடுப்புகளை உருவாக்கும் பணிகள் அய்.அய்.டி…
இது ஆரம்பமோ?
கருநாடக மாநிலம் ஹூ கேரி பகுதியில் உணவு விடுதி நடத்தி வந்த ராமா என்பவர் சமையல் எரிவாயு முடக்கம் காரணமாக வியாபாரத்தை நடத்த முடியாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார். கருத்துக் கணிப்பு சட்டப் பேரவை தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகளை…
இந்தியாவின் கச்சா எண்ணெய் கையிருப்பு 9.5 நாட்களுக்கு மட்டுமே போதுமானது! ஒன்றிய அரசு ஒப்புதல்
புதுடில்லி, மார்ச் 25 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துள்ள ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம், நாட்டின் அவசர கால கச்சா எண்ணெய் இருப்பு குறித்த முக்கிய விவரங்களைப் பகிர்ந்துள்ளது. பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில்…
வேட்பு மனு பிரமாணப் பத்திரத்தில் கணக்கில் வராத ரூ.200 கோடி பங்களா! கேரள பா.ஜ.க. தலைவர் தகுதி நீக்கம் செய்யப்படுவாரா?
திருவனந்தபுரம், மார்ச் 25 கேரள பாஜக தலைவரும், நேமம் தொகுதி வேட்பாளருமான முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ரூ.200 கோடி பங்களாவை கணக்கில் காட்டவில்லை என்று குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் இதுதொடர்பாக ஆதாரங் களை வெளியிட்டு…
