நிலவு மண்ணில் சொகுசு பங்களா: 2032-க்குள் கட்டி முடிக்க திட்டம்; முன்பதிவு தொடக்கம்!

கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜி.ஆர்.யு. (Galactic Resource Utilisation Space) என்ற நிறுவனம், வரும் 2032ஆம் ஆண்டுக்குள் நிலவில் ஒரு ஓட்டலைக் கட்டப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இணையதளமும் தொடங்கப்பட்டது.

பூமியில் உள்ள சொகுசு விடுதிகளில் தங்கிப் அலுத்துப் போனவர்களுக்கு குட்நியூஸ். 2032ஆம் ஆண்டுக்குள் நிலவில் ஒரு நிரந்தர ஓட்டலைக் கட்டி முடிக்க கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜி.ஆர்.யு (Galactic Resource Utilisation Space) என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நிலவில் காலடி எடுத்து வைத்து, அங்குள்ள முதல் ஓட்டலில் தங்க ஆசைப்பட்டால், நீங்க இப்போதே 10 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8.4 கோடி) முன்பணமாக செலுத்த வேண்டும். பூமிக்கு அப்பால் மனிதன் கட்டிய முதல் நிரந்தரக் கட்டடம் என்ற பெருமையைப் பெறப்போகும் இந்த ஓட்டலுக்கான முன்பதிவு இணையதளம் ஜனவரி 12 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இந்த பிரம்மாண்டத் திட்டத்திற்குப் பின்னால் இருப்பவர் ஸ்கைலர் சான் என்ற 21 வயது இளைஞர். பெர்க்லி பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர், தனது கல்லூரி காலத்திலேயே இதற்கான அய்டியாவை உருவாக்கி, தற்போது SpaceX முதலீட்டாளர்களின் ஆதரவோடு களமிறங்கியுள்ளார். நாம் இறப்பதற்கு முன்பே மனிதன் பல கோள்களில் வாழும் இனமாக மாற வேண்டும் என்பதே இவரது லட்சியம்.

2029இல் தொடங்கப்படவுள்ள இந்த கட்டுமானப் பணியில் ஆச்சரியமான விஷயம் உள்ளது. பூமியில் இருந்து சிமெண்ட், செங்கல் எடுத்துச் செல்வதற்குப் பதிலாக, நிலவில் உள்ள மண்ணையே (Lunar Soil) மிக உறுதியான கட்டுமானப் பொருளாக மாற்றும் அதிநவீன தானியங்கி முறையை இவர்கள் பயன்படுத்தப் போகிறார்கள்.

நிலவின் சூழலை மனிதர்கள் தங்குவதற்கு ஏற்ப கட்டுப்படுத்த முடியுமா என்பதைச் சோதிக்க ஒரு சிறிய ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்.

மிஷன் 2: விண்வெளி கதிர்வீச்சிலிருந்து தப்பிக்க நிலவின் பள்ளங்களுக்கு (Lunar Pit) அருகே காற்று நிரப்பப்பட்ட கூடாரங்கள் அமைத்து கட்டுமானப் பணிகள் விரிவுபடுத்தப்படும். 4 பேர் தங்கும் வசதியை 10 பேராக உயர்த்தி, ரோபோட்கள் மூலம் நிலவை ஒரு நிரந்தரக் குடியிருப்பாக மாற்றுவது.

தொடக்கத்தில் விண்வெளிப் பயணம் செய்யத் துணியும் பெரும் பணக்காரர்கள் மற்றும் வித்தியாசமான முறையில் தேனிலவு (Honeymoon) கொண்டாட விரும்பும் புதுமண இணையர்களே இந்த ஓட்டலின் முக்கிய வாடிக்கையாளர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர், நாசாவின் முழு ஆதரவோடு செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திற்குச் சுற்றுலா செல்வதும் சாத்தியமாகலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *