காஷ்மீர் தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும் பலியானவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்

காஷ்மீர் பகுதியில் சற்றும் எதிர்பாராமல் நடைபெற்ற தீவிரவாதக் கும்பலின் திடீர் தாக்குதல் முறையற்றது; மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது; சுற்றுலா  சென்ற பயணிகள் மீது பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதல் முற்றிலும் கோழைத்தனமானது. இதனை ஒன்றிய அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும்.…

viduthalai

கழகத் தலைவரின் உடல் நலம் கருதி சுற்றுப் பயணம் ஒத்தி வைப்பு

கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் உடல் நலம் கருதி மருத்துவர்களின் ஆலோசனையின் பெயரில் அவரது வெளியூர் பயணங்கள் தவிர்க்கவே முடியாத சூழ்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தோழர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். – கலி. பூங்குன்றன்           துணைத் தலைவர், திராவிடர் கழகம்

viduthalai

சால்வை அணிவித்து உடல்நலம் குறித்து

காவேரிப்பட்டணம் வருகை தந்த கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று வரும் கி.விஜயகுமாரி தியாகராசன், தா.சுப்பிரமணியம், த.அறிவரசன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். (20.4.2025)

Viduthalai

ஹிந்தித் திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்! மாணவர்களிடையே துணை முதலமைச்சர் உதயநிதி வலியுறுத்தல்

சென்னை,ஏப்.22- தமிழ் நாட்டுக்கும், தமிழுக்கும் எதிராக சூழ்ச்சி நடப்பதாகவும், ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் மாணவர்களிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். ஹிந்தி திணிப்பு சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.80…

viduthalai

வடக்கே இருந்து வரும் எதிர்ப்புகளுக்கு உரிய பதிலடி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து

சிவகாசி,ஏப்.22- வடக்கே இருந்து வரும் எதிர்ப்புகளுக்கும், உள்ளுக்குள் இருந்தே அவர்களுக்கு உதவும் மூன்றாம் படைகளுக்கும் உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று திமுக பாசறைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். சிவகாசியில் திமுக மருத்துவர் அணி சார்பில் சமூக…

viduthalai

தமிழ்நாடு முழுவதும் புதிதாக 643 துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை, ஏப்.22- தமிழ்நாடு முழுவதும் புதி தாக643 துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்ட பேரவையில் அறிவித்தார். புதிய அறிவிப்புகள் சட்டபேரவையில் நேற்று (21.4.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக்கோரிக்கை மீதான விவா தத்துக்கு…

viduthalai

வணிக வளாகங்களில் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் ரூ.2 ஆயிரமாக உயர்வு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவிப்பு

சென்னை, ஏப்.22- தமிழ்நாடு சட்டசபையில் கேள்வி நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு), தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதனிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று அரசு உத்தர விட்டுள்ளது.…

viduthalai

கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு மொரப்பூர் ரயில் நிலையத்தில் சால்வை அணிவித்து வரவேற்பு

கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்திற்கு 19/04/2025-அன்று இரவு வருகை தந்த திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு மொரப்பூர் ரயில் நிலையத்தில் மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலைமையில் சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்டத்…

Viduthalai

பிறந்த நாள் வாழ்த்து

பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர் க.செல்லப்பன் பேரன் சு.நிஷாந்த் 17ஆவது பிறந்த நாள் (22.4.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்.

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 22.4.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: < தமிழ்நாட்டில் நீட் தேர்வு முறையை ரத்து செய்தால் தான் கூட்டணியில் இருப்போம் என சொல்ல தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிடுக்கிப்பிடி கேள்வி; சட்டப்பேரவையில் காரசார வாக்கு வாதம். < உச்ச நீதிமன்றம் மற்றும்…

Viduthalai