டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் மாற்றங்கள் செய்திட கட்சித் தலைமை முடிவு. தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி ஆகஸ்ட் 9இல் நாடாளுமன்றம் முற்றுகை, காங்கிரஸ் திட்டம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* நன்கொடை நிதியில் முறைகேடு செய்த விவகாரம் அயோத்தி ராமன் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் பதவில விலகல்: உறுப்பினரும் பதவி விலகியதால் பரபரப்பு.
* ஒன்றிய அரசின் புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு எதிராக சட்ட, அரசியல் போராட்டம் நடத்திட பாஜக அரசு அல்லாத மாநில முதலமைச்சர் களுடன் தெலங்கானா அரசு ஆலோசனை செய்திட முடிவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘இளைஞர்களின் எதிர்காலத்தை பறிக்கும் செயல்’: மகாராட்டிரா டெட் 2026 தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒன்றிய அரசை சாடிய காங்கிரஸ். தொடர்ந்து நடைபெறும் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் தங்கள் குரலை எழுப்ப வேண்டும் என்று பிரியங்கா காந்தி வலியுறுத்தினார். “நீங்கள் உரத்தக் குரலில் இதற்கு எதிராக குரல் கொடுக்கும் வரை, உங்கள் எதிர்காலத்தைக் குறிவைக்கும் இந்த அச்சுறுத்தல் தடையின்றித் தொடரும்,” என்று அவர் கூறினார்.
* ஆர்எஸ்எஸ் (RSS) நிகழ்ச்சியில் பங்கேற்று ஹெட்கேவரை புகழ்ந்த நாக்பூர் ஆணையர்; அவரைப் பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல். அதிகாரியின் இந்தச் செயலைக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என்றும், ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்திருக்க விரும்பினால் தனது சீருடையைக் கழற்றிவிட்டுச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தின.
தி இந்து:
* ஒன்றிய அரசின் புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தால் ஏற்படும் நிதிச் சுமை குறித்து பாஜக ஆளும் இரு மாநிலங்கள் கேள்வி. ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள ‘விக்சித் பாரத்-கியாரண்டி ஃபார் ரோஸ்கர் அண்ட் ஆஜீவிகா மிஷன் (கிராமின்)’ (VB-G RAM G) எனும் புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தங்கள் மீது சுமத்தப்படும் கூடுதல் நிதிச் சுமை குறித்து, குறைந்தது மூன்று மாநிலங்களாவது (அவற்றில் இரண்டு பாஜக தலைமையிலான அரசுகள்) கவலை தெரிவித்துள்ளன.
தி டெலிகிராப்:
* ஆசிரியர் தகுதி (டெட்) தேர்வுத் தாள் கசிவு விவகாரம், ஒன்றிய அரசால் ஒரு தேர்வைக் கூடச் சரியாக நடத்த முடியாது என்பதை நிரூபித்துள்ளது: கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (COCKROACH PARTY) நிறுவநர் அபிஜீத் டிப்கே காட்டம்.
– குடந்தை கருணா
