இந்நாள் – அந்நாள்

உயிரியலாளர் வில்லியம் பேட்சன் பிறந்தநாள் இன்று (08-08-1861) பேட்சன், 1861 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் நாள் இங்கிலாந்தின் விட்பியில், அன்னா அய்க்கன் பேட்சன் மற்றும் வில்லியம் ஹென்றி பேட்சன் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வில்லியம்…

viduthalai

சிறப்பு ரயில் என்ற பெயரில் கட்டணக் கொள்ளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல்!

புதுடில்லி, ஆக.8 விழா மற்றும் நெரிசல் மிகுந்த காலங்களில் இயக்கப்படும் முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களுக்கு, வழக்கமான ரயில்களை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற சஞ்சனா மக்களவையில்…

viduthalai

கவிதை

பெரியார் பன்னாட்டு அமைப்பின் விருது பெற்ற நம் கவிஞருக்கு வாழ்த்து மடல் அய்யாவின் அடிச்சுவட்டில் அணையாத தீபமெனும் அருந்தமிழ்த் தலைவரின் அருமந்த தோழனாய் பருந்தும் நிழலுமாய்ப் பெரியார் மண்ணில் இருந்தும் உழைத்தும் எந்நாளும் வாழியரோ! நீர்க்குள் பாசியாய்த் தமிழக ஓடையில் வேர்…

viduthalai

ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோயில் நில மோசடி கைதானவர் சிறையில் உயிரிழப்பு!

மதுரை, ஆக.8- ரூ.100 கோடி மதிப்பிலான பழனி கோவில் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்குரைஞர் அன்வர்தீன் என்பவர் உயிரிழந்தார். மோசடி பத்திரப்பதிவு பழனி கோயில் அடிவாரம் பகுதியில் தண்டபாணி சாமிகள் மடத்தின் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.100 கோடி…

viduthalai

நாட்டில் 86,360 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள்: ஒன்றிய அரசு

புதுடில்லி, ஆக. 8 ‘நாடு முழுவதும் தற்போது 86,360 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் இருப்பதாகவும், அனைத்து மருத்துவ பட்டயப் படிப்புகளையும் முதுநிலை டிஎன்பி பட்டப் படிப்புகளாக மாற்றும் திட்டம் எதுவும் தற்போது இல்லை’ என்றும் ஒன்றிய அரசுத் தரப்பில் நாடாளுமன்றத்தில்…

viduthalai

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்

புதுடில்லி, ஆக.8- சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம் பாட்டுத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப் பட்டது. இந்த மசோதா மாநிலங் களவையில் ஏற்கெனவே நிறை வேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை 7.8.2026 அன்று காலை 11 மணிக்கு கூடியதும், கரப்பான்பூச்சி…

viduthalai

‘‘எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்!’’

“எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்!” என்று புதுடில்லியில் ஒலித்த அந்தக் குரல் மனித மனங்களை உலுக்கக் கூடியது. கழிவுநீர்க் கால்வாய்களையும், திடக் கழிவுத் தொட்டிகளையும் சுத்தம் செய்ய மக்களை கட்டாயப்படுத்தும் சட்டவிரோத நடைமுறையை ஒழிக்க வேண்டும் என்றும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க…

viduthalai

சுயராஜ்யமா? சுயமரியாதையா?

சுயமரியாதை இல்லாத ஒரு மனி தனுக்குச் சுயராஜ்யம் அவசியமே இல்லாததாகும். சுயராஜ்யம் இல்லாத எந்த மனிதனுக்கும்கூட சுயமரியாதை என்பது அவசியமானதேயாகும். சுயமரியாதையற்றவனைப் பிணமென்றுதான் சொல்ல வேண்டும். (குடிஅரசு 24.1.1926)  

viduthalai

அப்பா – மகன்

மனநிலை பாதிப்பு மகன்: திருச் செந்தூர் கோயில் வளாகத்தில் தீக் குளித்த மனநலம் பாதிக்கப்பட்ட பக்தர் பற்றி செய்தி வந்துள்ள தே அப்பா! அப்பா: பக்தி என்பதே ஒரு வகை மனநிலை பாதிப்பு தானே மகனே!!

viduthalai

‘பெரியார் உலகம்’

சுயமரியாதைச் சுடரொளி பொறியாளர் கோவிந்தராசரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவருடைய மகள் மருத்துவர் தென்றல், ‘பெரியார் உலகம்’ நன்கொடை யாக ரூ.10,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 6.8.2026)

viduthalai

‘நீட்’ வினாத்தாளை விலைக்கு விற்றது என்.டி.ஏ. பேராசிரியர்களே சிபிஅய் குற்றப் பத்திரிக்கையில் தகவல்

புதுடில்லி, ஆக.8-  தேசிய தேர்வு முகமையை (என்டிஏ) சேர்ந்த பேராசிரியர்களே பணத்துக்காக நீட் வினாத்தாளை விற்பனை செய்துள்ளனர் என்று சிபிஅய் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவ இளநிலைப் படிப்புகளுக் கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது.…

viduthalai

‘மக்களை கண்டு அஞ்சும் மோடி அரசு’ புதிய சட்டத்தை கண்டித்து கெஜ்ரிவால் கருத்து

புதுடில்லி, ஆக.8- ஒன்றிய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள சமூக ஊடகச் சட்டம், அரசுக்கு எதிரான விமர்சனங்களை நசுக்குவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டது. இது, அதிகரித்து வரும் மக்கள் போராட்டங்களைக் கண்டு பிரதமர் நரேந்திர மோடி பயப்படத் தொடங்கி விட்டார் என்பதையே காட்டுகிறது…

viduthalai