எல்லாவற்றிலும் ‘வெற்றி’ என ஸ்டிக்கர் ஒட்டினால் போதும் என நினைக்கும் த.வெ.க. அரசு: மு.க.ஸ்டாலின் சாடல்!

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

சென்னை, அக். 3-  “பொருளா தாரம், விலைவாசி, மின்சாரம், தொழில்துறை, சட்டம் ஒழுங்கு, மருத்துவம், பால்வளம் என எல்லாவற்றிலும் தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. ‘ரீல்ஸ்’ பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எம்எல்ஏ ‘ஷாப்பிங்’

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “எம்எல்ஏ ஷாப்பிங்கில் மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கும், மக்கள் மளிகைக் கடையில் கூட ஷாப்பிங் செய்ய முடியாமல் கஷ்டத்தில் தவிப்பது தெரியுமா? தாராபுரத்தில் பரப்புரைக்கு இடையே மளிகைக் கடை ஒன்றில் விலைவாசி உயர்வு குறித்து கேட்டேன். 4 மாதம் முன்பிருந்த விலையில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவுக்கு உயர்ந்துள்ளது.

அன்றாடச் சமையலுக்கே வீடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. ‘ரீல்ஸ்’ பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா? இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி இறங்குமுகத்தில் இருந்தபோது கூட, திடாவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு ஏறுமுகத்தில் இருந்தது. ஆனால் இன்றைய நிலை என்ன?

சரிவு

இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்த நிலையில் கூட, கடந்த மூன்று மாதங்களாகத் தமிழ்நாடு சரிவைச் சந்தித்து வருகிறது. இந்த ஆட்சி வேலைக்கு ஆகாத வேஸ்ட் ஆட்சி என முடிவெடுத்து, தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான கைடென்ஸ் தமிழ்நாட்டில் (Guidance TN-இல்) இருந்தும் அனுபவமிக்க வல்லுநர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்வதாகச் செய்திகள் வருகின்றன.

பொருளாதாரம், விலைவாசி, மின்சாரம், தொழில்துறை, சட்டம் ஒழுங்கு, மருத்துவம், பால்வளம் என எல்லாவற்றிலும் தமிழ்நாடு வீழ்ச்சியை நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.

இவற்றில் கவனம் செலுத்தாமல், விளக்குமாத்துக்குப் பட்டுக் குஞ்சம் என்பது போல எல்லாவற்றிலும் ‘வெற்றி’ என ஸ்டிக்கர் ஒட்டினால் போதும் என நினைக்கும் அரசிடம் மாட்டிக்கொண்டு மக்கள் தவிக்கின்றனர்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *