பிஜேபி மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் நாடாளுமன்ற தேர்தலின் போது நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்தது உண்மையே நீதிமன்றத்தில் சிபிசிஅய்டி தகவல்
சென்னை, ஜூலை.18- நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக தேர்த லின் போது வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டதாக சி.பி.சி.அய்.டி. காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். ரூ.4 கோடி பறிமுதல் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நெல்லை தொகுதியில்…
சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட நகராட்சிப் பணிகளை வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் செயல்படுத்த வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை, ஜூலை.18- சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ள நகராட்சி பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நிறைவேற்றி, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சென்னை தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை…
பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு முதல் சுற்றில் 36,731 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு
சென்னை, ஜூலை 18 பொறியியல் படிப்பு களுக்கான சேர்க்கை கலந்தாய்வின் முதல் சுற்றில் 36,731 மாணவர்களுக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. அவர்கள் அதை உறுதி செய்த பிறகு, கல்லூரியில் சேர்வ தற்கான இறுதி ஆணை வழங்கப்படும். கலந்தாய்வு தமிழ்நாட்டில்…
பெங்களூரு ரவுடி கொலை வழக்கு பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்மீது வழக்கு
பெங்களூரு, ஜூலை 18 பெங்களூரு பாரதிநகர் பகுதியில் 15.7.2025 அன்று இரவு பிரபல ரவுடி சிவாவை பத்து பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக பாரதிநகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி…
பிஜேபி கூட்டணி ஆளும் பீகாரில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நுழைந்து நோயாளி சுட்டுக்கொலை
பாட்னா, ஜூலை 18 பீகார் மாநிலத்தின் பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தன் மிஸ்ரா. இவர் மீது பல கொலை வழக்குகள் உள்பட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவர் சமீபத்தில் பக்ஸர் சிறையிலிருந்து பகல்பூர் சிறைக்கு மாற்றப்பட்டார். இவர் சிகிச்சைக்காக…
கீழடி அகழாய்வு ஆய்வறிக்கை: உண்மையை மூடி மறைக்க ஒன்றிய அரசு முயற்சி! தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா பகிரங்க குற்றச்சாட்டு!
புதுடில்லி, ஜூலை 18 – கீழடி அகழாய்வு அறிக்கையின் உண்மையைமூடி மறைக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என்று தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராம கிருஷ்ணா குற்றஞ்சாட்டியுள்ளார். கீழடி அகழாய்வு அறிக்கை தமிழர்களின் பாரம்பரியத்தையும், தொன்மையையும் பறைசாற்றும் வகையில், சிவகங்கை மாவட்டம் கீழடியில்…
மலேசியா இடைநிலைப் பள்ளிகளில் செந்தமிழ் விழா
மலேசியா பகாங் மாநிலம், மெந்தகாப் மாவட்டம். 10 இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 600 மாணவர்கள் செந்தமிழ் விழாவை கொண்டாடினர். மாணவர்கள் அனைவருக்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மற்றும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனை நூல்கள் அன்பளிப்பாக மலேசியா பெரியார்…
கழகக் குடும்ப விழா!
தஞ்சை, ஜூலை 18 தஞ்சாவூர் மாநகர கழக செயலாளர் இரா.வீரக்குமாரின் 50 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, 15.7.2025 அன்று அவரது இல்லத்திற்குச் சென்று கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், மாநில…
ஊற்றங்கரை சரவணன்-இரம்யா இணையேற்பு
கிருட்டினகிரி - ஊணாம் பாளையம் கோவிந்தன் - முருகம்மாள் ஆகியோரின் மகன் கோ.சரவணனுக்கும், அழகாபுரி வெங்கட்ராமன்-சிவசக்தி ஆகியோரின் மகள் வெ.இரம்யா (எ) மஞ்சுளாவுக்கும் கடந்த 14.7.2025 அன்று காலை 10 மணியளவில் மணமகள் இல்லத்தில் வாழ்க்கை இணை யேற்பு நிகழ்வை கழக…
கல்லூரி மாணவ, மாணவிகளிடம் துண்டறிக்கை பரப்புரை
மேட்டூர், ஜூலை 18 இடைப்பாடியில் மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளால் வெளியிடப்பட்ட துண்ட றிக்கை பள்ளி- கல்லூரி மாணவ, மாணவர்களிடம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் இடைப்பாடி. கோவி.அன்புமதி,…
