டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நான்கு அதிமுக எம்எல்ஏக்களின் பதவி விலகல் ஏற்கப்பட்டதை எதிர்த்து வழக்கு: பேரவைத் தலைவர், செயலர் பதில் அளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் தாக்கீது. இடைத்தேர்தல் நடைபெறுமா? தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பு.
* வினாத்தாள் கசிவு, தேர்வு நிர்வாகக் குளறுபடிகள், பணி நியமன ரத்து, விண்ணை முட்டும் கட்டண உயர்வு, தனியார்மயமாக்கல், ஊழல் முறைகேடுகள் ஆகியவற்றை தான் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைச் சிதைக்கும் கருவிகளாக மோடி அரசு பயன்படுத்தி வருகிறது என ராஜஸ்தான் கோடாவில் நடைபெற்ற மாநாட்டில் ராகுல் காட்டம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* 360 எம்.பி.க்கள் பலத்தைப் பெறுவதற்காக அடுத்தடுத்து எதிர்க்கட்சிகளை உடைக்கும் பாஜக! திரிணாமுலைத் தொடர்ந்து சிவசேனா, சமாஜ்வாடிக்குக் குறி; முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற குறுக்கு வழி முயற்சி
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* “இரு தரப்பு வாதங்களைக் கேட்ட பிறகே முடிவு” – திரிணாமுல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவகாரத்தில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா உறுதி. இதற்காக, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மக்களவைத் தலைவர் அலுவலகத்தில் இருந்து 16.6.2026 அன்று மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மோடி அரசின் புதிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (VB-G RAM G) ரத்து செய்ய ஆர்வலர்கள் கோரிக்கை; ஜூலை 1இல் நாடு தழுவிய போராட்டத்திற்கு அறிவிப்பு. கிராமப்புறக் குடும்பங்களுக்கு வேலை கிடைப்பதில் ஏற்கனவே சிரமம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு.
* எனது கடிதத்திற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் முறையான பதிலளிக்க வேண்டும் என்று கருநாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே வலியுறுத்தல். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சட்டரீதியான நிலை, அமைப்பு ரீதியான கட்டமைப்பு, நிதி ஆதாரங்கள் மற்றும் பொதுப் பொறுப்புடைமை ஆகியவை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்குமாறு அதன் தலைவர் மோகன் பகவத்திற்கு கருநாடக மாநில உள்துறை அமைச்சர் பிரியங்கக் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
* உ.பி. ‘டபுள் இன்ஜின்’ ஆட்சி என்பது ‘ஊழலின் இரட்டைத் தொட்டி’ போன்றது என்று ராமர் கோயில் நன்கொடை விவகாரத்தில் உ.பி. அரசைச் சாடியுள்ளார் அகிலேஷ். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குப் பதிலாக, சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை (SIT) அமைப்பதற்கே மாநில அரசு முன்னுரிமை அளிப்பதாக அகிலேஷ் காட்டம்.
தி டெலிகிராப்:
* அமெரிக்க பசிபிக் கட்டளை மய்யம் (US PACIFIC COMMAND) இந்தியாவின் வரைபடத்தில் காஷ்மீரைத் தவிர்த்து, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை (POK) பாகிஸ்தான் பகுதியாகக் காட்டியதை அடுத்து பிரதமர் மோடியைக் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* சமாஜ்வாடி கட்சி (SP) பெரிய பிளவை சந்திக்கவுள்ளது என்ற உத்தரப் பிரதேச அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பாரின் கூற்றை அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் நிராகரித்தார். மேலும், எதிர்க்கட்சிகளில் கட்சித் தாவல்களை தூண்டிவிட்டு பிளவை ஏற்படுத்தும் வரலாறு பாஜகவுக்கு உண்டு என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
– குடந்தை கருணா
