‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 23.7.2025 -ஆம்தேதி ‘விடுதலை’யின் அறிக்கையின்படி பெரியார் உலகத்திற்கு தேனி போடிநாயக்கனூரில் கழகக் காப்பாளர் ச.இரகுநாகநாதன், பொதுக்குழு உறுப்பினர் பேபிசாந்தாதேவி, மாவட்டத்தலைவர் ம.சுருளிராஜ் ஆகியோர் முன்னிலையில்,போடி நகர திராவிடர் கழகத்தலைவர் இர.பெரியார்லெனின்- இணையர் நாகஜோதி, மகள் எழில்…
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நாள் முழுதும் மக்களவை ஒத்திவைப்பு
புதுடில்லி, ஆக.5 பீகாரில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்அய்ஆர்) குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக முழக்கம் எழுப்பியதையடுத்து நேற்று (4.8.2025) நாள் முழுவதும் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள…
வட மாநில சமூகச் சீர்திருத்தவாதிகளை முன்னிறுத்தி மகாராட்டிராவில் ஸநாதன எதிர்ப்புக் குரல்!
மும்பை, ஆக.5 மகாராட்டிராவில் தேசிய வாத காங்கிரசைச் சேர்ந்த (சரத்பவார் காங்கிரஸ்) ஜிதேந்திர அவாட் என்பவர், ஸநாதனத்தை எதிர்த்தும், ஸநாதனத்தை எதிர்த்துப் போராடிய வட மாநில சமூக சீர்திருத்தவாதிகள்பற்றியும் விரிவாகக் கவிதை ஒன்றை மராட்டிய மொழியில் தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.…
ஏழுமலையான் தடுக்கவில்லையே! திருப்பதியில் தொடர் நகை பறிப்பு!
திருப்பதி, ஆக.5 திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்கின்றனர். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் பணம், நகை, தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த நிலையில், திருப்பதி…
நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கம்
புதுடில்லி, ஆக.5 இன்று (5.8.2025) நாடாளுமன்றம் கூடிய நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கியது.
‘நீட்’ தகுதித் தேர்வின் லட்சணம்!
கோரக்பூர், ஆக.5 கோரக்பூர் எய்ம்ஸ் அக மதிப்பீட்டுத் தேர்வுகளில் 125 மாணவர்களில் 104 பேர் தோல்வி; 83 பேர் குறைந்தது இரண்டு பாடங்களில் தோல்வி! கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி! கோரக்பூரில் உள்ள எய்ம்ஸில் 2024 ஆம் ஆண்டின் எம்.பி.பி.எஸ். மருத்துவ மாணவர்களின் இரண்டாம்…
பீகாரில் பரிதாபம் குளத்திற்குள் கார் பாய்ந்தது பக்தர்கள் 5 பேர் பலி
பாட்னா, ஆக.5 பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியைச் சேர்ந்த சிவ பக்தர்கள் சிலர் பிரபல சிவத்தலங்களுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றனர். பீகாரின் சாகுந்த் அருகே அவர்களுடைய கார் நள்ளிரவில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநர் கண் அசந்து தூங்கியதாகத் தெரிகிறது. இதனால்…
ராமர் கல் எனக் கூறி பக்தர்களிடம் பணம் வசூலித்த வழிபாட்டுத் தலம் அகற்றம்
ராமேசுவரம், ஆக.5 ராமேசுவரத்தில் கோதண்டராமர் கோயில் கடற்கரையில் சீதையை மீட்க ராமர் கட்டிய பாலத்தின் கல் எனக்கூறி, பக்தர்களிடம் வசூல் வேட்டை நடத்திய வழிபாட்டுத் தலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நேற்று (4.8.2025) அகற்றினர். ராமேசுவரம் தீவைச் சுற்றிலும்…
இனி பாஸ்வேர்ட் இல்லாமலே… யுபிஅய் மூலம் பணம் செலுத்தலாம்! வருகிறது பயோமெட்ரிக் முறை
சென்னை, ஆக.5 போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm), கூகுள் பே (Google Pay) மற்றும் பீம் (BHIM) போன்ற யுபிஅய் செயலிகளைப் பயன்படுத்தும் பயனர்கள் இனி தங்கள் பணப் பரிவர்த்தனைகளை பின் எண் இல்லாமல், பயோமெட்ரிக் முறைகளைப் பயன்படுத்தி சரிபார்க்கும் வசதியைப்…
6.8.2025 புதன்கிழமை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக திராவிட மாணவர் கழக சந்திப்பு கூட்டம்
சிதம்பரம்: மாலை 6 மணி * இடம்: அண்ணாமலை நகர், மண்ரோடு காவல் நிலையம் அருகில், சிதம்பரம் *தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * கருத்துரை: அன்பு.சித்தார்த்தன் (மாவட்ட துணைத் தலைவர்) * வேண்டல்: மாவட்ட, நகர,…
