10 சதவீதம் உள்ள உயர் ஜாதியினரின் கட்டுப்பாட்டில் இந்திய ராணுவம் ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு
பாட்னா, நவ.5 ‘‘நாட்டில் 10 சதவீதம் மட்டுமே உள்ள மக்கள் இந்திய ராணுவத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர். உன்னிப்பாக கவனித்தால் இது தெரியும்'' என்று பீகார் சட்ட மன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கி ரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறி யுள்ளார்.…
நான் வழக்குகளை விசாரிப்பதை ஒன்றிய அரசு விரும்பவில்லை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி வேதனை
புதுடில்லி, நவ.5 உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, தீர்ப்பா யச் சீர்திருத்தச் சட்டத்தின் அரசியல மைப்புச் சட்ட சவால்கள் தொடர்பான மனுக்களை விசாரித்தது. இந்த வழக்கை அய்ந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வுக்கு அனுப்பக் கோரி ஒன்றிய…
தமது வெற்றி வாய்ப்பு சந்தேகத்தினை உணர்ந்து – தேர்தல் ஆணையத்தையே ஆயுதமாக்கும் நிலையா, பீகாரில்?
வாக்குகளைப் பறித்தும், பீகார் மாநிலத்திற்கு ஒன்றிய பி.ஜே.பி. அரசு பணத்தைப் பெருமளவில் வாரி இறைத்தும், கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்துத் திணிப்பையும் செய்து வெற்றி காணப் பார்க்கிறது பி.ஜே.பி பீகார் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக பி.ஜே.பி., பீகாரில்…
பிரதமர் ஏன் பீகாரில் பிளவுவாதம் பேசுகிறார்?
சென்ற வாரம் பிரதமர் மோடி பீகாரில் தேர்தல் பிரச்சார மேடையில் பேசும்போது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியளித்தார். அது என்னவென்றால், பீகாரிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து வேலை செய்யும் தொழிலாளர்களை தி.மு.க கட்சியினர் துன்புறுத்துகிறார்கள் என்ற கூற்றாகும். இப்படி ஒரு வடிகட்டிய பொய்யை,…
வேலை வாய்ப்பு இல்லாததால்தான் பீகார் இளைஞர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்கின்றனர் பிரியங்கா குற்றச்சாட்டு
பாட்னா, நவ.4- பீகார் இளை ஞர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்ல வேலையில்லா திண்டாட் டமே காரணம் என்று பிரியங்கா குற்றம் சாட்டினார். பீகார் சட்டசபை தேர்தலை யொட்டி, சாஹர்சா மாவட்டம் சோனபர்சாவில் நடந்த இந் தியா கூட்டணி தேர்தல் பிர சார…
பிரதமர் மோடியை தேர்தல் நேரத்தில்தான் பார்க்க முடியும் காங்கிரஸ் தலைவர் கார்கே விமர்சனம்
பாட்னா, நவ.4- வைஷாலி மாவட்டம் ராஜா பாகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கி ரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே பேசியதாவது:- பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மனுஸ்மிரிதியில் நம்பிக்கை கொண்ட பா.ஜனதாவின் மடியில் அமர்ந்து இருக்கிறார். சோசலிஸ்டு தலைவர்கள் ஜெயபிரகாஷ்…
திருந்தாதா தேர்தல் ஆணையம்?
தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ‘எஸ்.அய்.ஆர். ஆபத்து குறித்து மக்களிடம் கொண்டு செல்வோம்’ என்ற தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், ‘எஸ்.அய்.ஆர். மிகவும் ‘புனித’மானது; இது இந்திய மக்களாட்சிக்கான ஒரு மைல்கல்’ என்று கூறி எதிர்க்கும் அனைத்து அமைப்பிற்கும் ஏட்டிக்குப் போட்டியாக தன்னு…
மும்பையில் 2026 ஜனவரி 3, 4 இரு நாள்கள் மாநாடு – கருத்தரங்கம்
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு, மகாராட்டிர மாநிலம், மும்பையில் 2026 ஜனவரி 3, 4 (சனி, ஞாயிறு) ஆகிய இரு நாள்களில் நடைபெறவிருக்கிறது – தமிழ், மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கருத்தரங்கம். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…
தொழிலாளர் கிளர்ச்சி
எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும், பாடுபடாத மக்கள் நிலை உயர்ந் திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத்துவமாக இருக்க வேண்டும். (‘குடிஅரசு’, 1-10-1933)
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்
திருநெல்வேலி, நவ.4 நெல்லை மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினரும், அதிமுகவின் (ஓ.பி.எஸ். அணி) முக்கிய பிரமுகருமான பி.எச். மனோஜ் பாண்டியன், இன்று (4.11.2025) காலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ் நாடு முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின்…
