இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழ்நாடு மீனவர்கள் 7 பேர் சென்னை வந்தனர்
சென்னை, ஆக. 30 தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேரை கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். ஒரு மாதத்திற்குப் பின்பு,…
வேலூர் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு மகளிர் உரிமைத்தொகை நிறுத்தம் : பெண்கள் அதிர்ச்சி!
வேலூர், ஆக 30 தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த ரூ.1,000 உதவித்தொகை கடந்த 3 மாதங்களாக பல்லாயிரக்கணக்கான பயனாளிகளுக்கு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெண்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த திமுக ஆட்சியின்…
கருநாடக நீர் பிடிப்புப் பகுதிகளில் பெருமழை தமிழ்நாட்டுக்கு காவிரியில் 12 ஆயிரம் கன அடி நீர் திறப்பு!
பெங்களூரு, ஆக. 30 கருநாடகா வில் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 12,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. டில்லியில் கடந்த 25-ஆம்…
பகுத்தறிவாளர் எம்.எம்.கல்புர்கி மதவெறி இந்து அமைப்பினரால் கொல்லப்பட்ட நாள் இன்று (30.08.2015)
கருநாடகத்தில் சாகித்திய அகாடமி விருது பெற்றவரான மல்லேசப்பா மடிவாளப்பா கல்புர்கி, மூட நம்பிக்கைகளுக்கும் மூடப் பழக்கவழக்கங்களுக்கும் எதிராகத் தொடர்ந்து பேசியும் செயல்பட்டும் வந்தவர். கலாச்சாரம் என்ற பெயரில் ஊறிப்போன பல பழக்க வழக்கங்களைக் குறித்து கடுமையாகத் தொடர்ந்து எதிர்வினையாற்றினார். குறிப்பாகக் காலில்…
இந்நாள் – அந்நாள் பகுத்தறிவு நகைச்சுவைக் கலைஞர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நினைவு நாள் இன்று (30-08-1957)
தமிழ்நாட்டின் 'சார்லி சாப்ளின்' என்று அழைக்கப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை மன்னராக வெற்றிவாகை சூடியவர். நகைச்சுவையை திகட்டாத கருத்துகளால் வழங்கி, மக்களைச் சிரிக்க வைத்ததோடு, சிந்திக்க வைக்கவும் செய்தார். சீர்திருத்த கருத்துகளை துணிச்சலோடு எடுத்துக்கூறிய அற்புத கலைஞர். என்.எஸ்.கே.…
வெள்ளத்தின்போது நேபாளத்தில் இருந்தது 400 தமிழர்கள்-அமைச்சர் ராஜ்மோகன் தகவல்
புதுடில்லி, ஆக.30 நேபாள வெள்ளத்தின்போது அங்கிருந்தது 103 தமிழர்கள் என்று இதுவரை தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், வெள்ளப்பெருக்கின்போது 400 தமிழர்கள் இருந்ததாக தமிழ்நாடு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். 400 பேரில், 21 மட்டுமே தற்போது சென்னை திரும்பியிருக்கிறார்கள். தேசமங்கையர்கரசி உள்பட…
கல்வி நிலையங்களில் ஜாதி வேறுபாட்டை நீக்கிட நீதிபதி சந்துரு பரிந்துரைகளை செயல்படுத்தக்கோரி வழக்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஆக.30- கல்வி நிலையங்களில் ஜாதி பாகுபாடு அகற்றுவது தொடர்பான நீதிபதி சந்துரு பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத் தக் கோரிய வழக்கில் தமிழ் நாடு அரசு பதில ளிக்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. திண்டுக்கல் பர்வேஷ் முஷாரப், உயர் நீதிமன்ற…
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவோரே கிருஷ்ணன் லீலைகளை ஏற்றுக் கொள்கிறீர்களா?
- சித்திரபுத்திரன் - கிருஷ்ண ஜெயந்தியாம்! அதுவும் எது கிருஷ்ணனின் பிறப்பு என்பதில் கூட சந்தேகமாம் - இரண்டு கிருஷ்ண ஜெயந்தி என்று முரண்பாடான செய்திகள். அது எப்படியோ தொலையட்டும் தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கட்டுரையைப் படியுங்கள். கிருஷ்ணன் -…
தா.நி. கீர்த்திவாசன் – வெ.ஜெ. சுவேதா ஆகியோரின் மணவிழாவைத் தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
விழுப்புரம் வி. சாத்தனூரில் பேராசிரியர் இரா. தாமோதரன் (அறவேந்தன்) - நித்தியா ஆகியோரின் செல்வன் தா. நி. கீர்த்திவாசன், கடலூர் பி.வெங்கட பிரபா - ஜெயந்தி ஆகியோரின் மகள் செல்வி வெ.ஜெ. சுவேதா ஆகியோரின் மணவிழாவை திராவிடர் கழகத் தமிழர் தலைவர்…
பேராசிரியர் முனைவர் நளினிதேவி அம்மையார் மறைவுக்குத் திராவிடர் கழகத் தலைவர் இரங்கல்
சீரிய தமிழ் உணர் வாளரும், பெண்ணுரிமைச் சிந்தனையாளரும், கவிஞரும், நாடக ஆசிரி யரும், எழுத்தாளரு மாகிய மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் நளினிதேவி அம்மையார் (வயது 82) நேற்று (29.08.2026) காலை மறைவுற்றார் என்பதை அறிந்து பெரிதும் வருந்துகிறோம். பெரியாரியப் பார்வையுடன் தமிழ் இலக்கி யங்களை…
அடாத மழையிலும் விடாமல் ‘எதிர் நீச்சலில் வென்ற பெரியாரின்’ வெற்றி வரலாற்றை எடுத்துரைத்த கழகத் தலைவர்!
பெரியார்மீது கடலூரில் பாம்பைப் போட்டதற்காகப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தோம்! செருப்பை வீசியதற்காகப் பெரியாருக்குச் சிலை வைத்தோம்! 1945இல் புதுச்சேரியில் திராவிடர் கழகத் தொடக்க மாநாட்டில் கலவரம் செய்தனர்! புதுச்சேரி. ஆகஸ்ட், 30 எதிர்நீச்சலில் வென்ற பெரியார் என்பது சாதாரணமான எதிர்ப்பு அன்று.…
புதுவையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்
எந்த ஆட்சியிலும், ஆளுங்கட்சியினருடைய பேச்சை, பேரவைத் தலைவர் இத்தனை முறை நீக்கினார் என்கிற வரலாறு கிடையாது! இதுதான் த.வெ.க. அரசின் 100 நாள்கள் ஆட்சியின் தனித்த சாதனை! மூன்றாவது கூட்டணியும் உருவாகலாம்; இன்னொரு கூட்டணியும் உருவாகலாம்! சென்னை, ஆக.30 தமிழ்நாட்டில் இதுவரை…
