கம்பம், தேனியில் ‘பெரியார் உலக’ நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (11.1.2026)
மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான தங்க. தமிழ்ச்செல்வன் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.50,000 தமிழர் தலைவரிடம் வழங்கினார். கூடலூர் ஜனார்த்தனன், அரிகரன், குடும்பத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு ரூ.1 லட்சத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். போடி ரகுநாகநாதன் – பேபி குடும்பத்தின் சார்பில் அவரது…
திருமணம் செய்யாமல் 40 ஆண்டுகள் சேர்ந்து வாழும் துணைவிக்கு குடும்ப ஓய்வூதியம் டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
புதுடில்லி, ஜன.12 திருமணம் செய்யாமல் 40 ஆண்டுகளாக இணைந்து வாழும் துணைவி மற்றும் அவரது வாரிசுகளின் பெயர்களை குடும்ப ஓய்வூதியப் பட்டியலில் சேர்க்கக் கோரிய ஓய்வுபெற்ற அரசு ஊழியரின் மனுவை பரிசீலிக்குமாறு ஒன்றிய அரசுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடும்ப…
கவிஞர் கலி. பூங்குன்றன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ‘பெரியார் விருது’களை எதிர்த்துத் தாக்கல் செய்த ‘ரிட்’ மனு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு!
சென்னை, ஜன.12 தமிழ்நாடு அரசால் கடந்த1996ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியார் பெயரில் விருதுகள் பெரியாரின் கொள்கைகளைப் பரப்புவோருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதன் முதல் விருது திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு திராவிடர்…
பிரிட்டிஷ் ஆட்சியின்போது நீதிமன்றத்தில் தந்தை பெரியாரின் வரலாற்று புகழ் மிக்க வாக்குமூலம் தாக்கல் (12.1.1934)
தந்தை பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டில் 1933 அக்டோபரில் ‘‘இன்றைய (பிரிட்டிஷ்) ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்?’’ என்று எழுதியதற்காக பிரிட்டிஷ் அரசு ராஜ துவேஷ சட்டத்தின் (124A) கீழ் வழக்குத்தொடுத்த நிலையில், நீதிமன்றத்தில் தந்தை பெரியார் கொடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கை…
இந்நாள் – அந்நாள்
‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்ற சட்டத்தை நிறைவேற்றி ‘ஆயிரம் ஆண்டு இழிவை ஒழிக்க முதல் அடி எடுத்த நாள்’ இன்று (12.01.1971) கோயில் கருவறைக்குள் குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே செல்லலாம் என்ற தடையை தந்தை பெரியார் மனித உரிமை…
மாண்பமை துணைக் குடியரசு தலைவரின் சிந்தனைக்கு!
டில்லியில் நடைபெற்ற மூன்றாவது பன்னாட்டு இந்திய மொழிகள் மாநாட்டைத் தொடங்கி வைத்து மாண்பமை குடியரசு துணைத் தலைவர் சி.பி.இராதா கிருஷ்ணன் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது: ‘‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணை, நாட்டின் பலதரப்பட்ட மொழிகளை அங்கீகரித்து, கவுரவிக்கிறது. இது நமது…
முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைகள்
முன்னேற்றத் தன்மையான விஷயங் களில், மக்களைச் சீர்திருத்தும் விஷயங்களிலும் மொழிப் புலவர்களுக்கும், மதவாதிகளுக்கும் இடம் கொடுப்பதும் கலந்து கொள்ளச் செய்வதும் முட்டுக்கட்டையான காரியமேயாகும். ‘குடிஅரசு' 15.1.1944
குரு – சீடன்!
என்னாயிற்று? சீடன்: விருட்ச விநாயகர் கோவிலில் அரசு வேம்பு திருக்கல்யாணம் என்று செய்தி வெளியாகி உள்ளதே, குருஜி! குரு: அதற்கும் ஒரு தல புராணம் எழுதி வைத்திருப்பார்களே, சீடா!
அப்பா – மகன்
திறமைக்கு இடமில்லையா? மகன்: ‘‘என் விதியை யாரும் மாற்ற முடியாது’’ என்று கிரிக்கெட் விளையாட்டுக்காரர் கில் கூறி உள்ளாரே, அப்பா! அப்பா: விளையாட்டிலும் கூட விதி தானா? திறமைக்கு இடமில்லையா, மகனே?
செய்தியும், சிந்தனையும்…!
‘எல்லாம் அவன் செயல்!’ * காஞ்சிபுரம் கோயிலில் 312 பவுன் நகை ‘மாயமானது!’ * ‘எல்லாம் அவன் செயல்!’ அதுவும் இடம்பெறுமா? *சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில், 3000 இளைஞர்களுடன் பிரதமர் மோடி உரையாடல். * ஒரு…
