கோபுரக்கலசத்தில் உள்ள தாமிர சொம்பை இரிடியம் என்று கூறி ஏமாற்றும் கும்பல்- காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு எச்சரிக்கை
சென்னை, பிப். 5- பொதுமக்கள் தங்கள் பணத்தை மோசடிக் கும்பலிடம் பறி கொடுத்து ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றும் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.இரிடியம் என்பது ஒரு மிகவும் கடினமான தன்மை கொண்ட உலோகம் மட்டுமே, அரிதாக கிடைத்தாலும் இது…
புத்தாக்கமான கட்டடங்களுக்கான தொழில்நுட்ப தீர்வைகள் அறிமுகம்
சென்னை, பிப்.5- சிறந்த இல்லங்களுக்கான புத்தாக்கமான தீர்வைகள் அடங்கிய முதலாவது அனுபவ மய்யத்தை ஹோகர் கன்ட்ரோல்ஸ் அண்ட் சூப்பர் சர்ஃபேசஸ் நிறுவனம் சென்னையில் திறந்துள்ளது.எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் திறக்கப்பட்டுள்ள இந்த மய்யத்தில் வண்ணபூச்சுக்கள், நவீன சுவர்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. டிஜிட்டல் …
வேலைக்காக பதிவு செய்துகாத்திருப்போர் எண்ணிக்கை 67.75 லட்சமாக உள்ளது தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, பிப். 5- தமிழ்நாட்டில் அரசு வேலைக்காக பதிவு செய்துகாத்திருப்போர் எண்ணிக்கை 67.75 லட்சமாக உள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. சென்னை, வேலைவாய்ப்பக அலுவலகங்களில் டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான காலத்தில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை விவரங்களை மாநில அரசு…
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு
நிலக்கோட்டைநாள்: 7.2.2023 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிஇடம்: பேருந்து நிலையம் எதிரில், நிலக்கோட்டைதலைமை: இரா.ஜெயப்பிரகாஷ் (ஒன்றிய செயலாளர், நிலக்கோட்டை)வரவேற்புரை: முத்து (ஒன்றிய தலைவர், வத்தலக்குண்டு)முன்னிலை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்), மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட செயலாளர்), மு.நாகராசன் (மண்டல தலைவர்), நா.கமல்குமார் (மாவட்ட…
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் பயனாளிகளுக்கு ஆதார் எண் கட்டாயம் – தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, பிப். 5- முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசா ணையில் கூறப்பட்டிருப்பதாவது:- சமூக நலத் துறை சார்பில், முதல்-அமைச்சரின் பெண் குழந்…
28 மாத போராட்டத்துக்கு பின் உ.பி. சிறையில் இருந்து கேரள பத்திரிகையாளர் விடுவிப்பு
லக்னோ, பிப். 5- பாலியல் வன் கொடுமையில் சிக்கிய பெண் இறந்தது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரி கையாளர் சித்திக்கப்பன், 28 மாத போராட்டத்துக்குப்பின் உ.பி. சிறையில் இருந்து வெளி வந்து உள்ளார்.உத்தரப் பிரதேசம் ஹாத்ரஸ் நகரில் 2020ஆம் ஆண்டு…
களப்பணியில் கழகப் பொறுப்பாளர்கள்
சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்கப் பரப்புரை தொடர்பயணம் மேற்கொள்ளும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் 13.02.2023 அன்று சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் பரப்புரை செய்ய இருப்பதை ஒட்டி புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் துண்டறிக்கைகள் விநியோகித்து கடை வசூல் செய்யப்பட்டது (02.02.2023).…
பாராட்டத்தக்க அறிவிப்பு மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சிக்கு தமிழ்நாடு அரசு ரூ.18.38 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை, பிப்.5 அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்குவதற்காக ரூ.18.38 கோடி நிதியை பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்…
கழகத் தலைவர் இரங்கல்
பெரியார் திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் சிறப்பாக நடித்த நடிகரும், இயக்குநருமான டி.பி. கஜேந்திரன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து வருந்துகிறோம். அவர் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவினர்களுக்கும், திரைப்படத் துறையினருக்கும் ஆழ்ந்த இரங் கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள் கிறோம்.-…
பெரியார் திரைப்படத்தில் நடித்த திரைக்கலைஞர் டி.பி.கஜேந்திரன் மறைவு
சென்னை,பிப்.5- பிரபல திரைப்பட இயக்குநரும், திரைக் கலைஞருமான டி.பி.கஜேந்திரன் (வயது 68) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (5.2.2023 காலமானார். இயக்குநராக மட்டுமின்றி 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்த டி.பி.கஜேந்திரன் ‘பெரியார்’ படத்தில் பெரியாரின் நண்பர்…
பொது சிவில் சட்டம் கொண்டுவர இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை! : ஒன்றிய அமைச்சர் தகவல்
புதுதில்லி, பிப்.5 - பொது சிவில் சட்டத்துக் கான சாத்தியக் கூறுகள் குறித்து 21-ஆவது சட்ட ஆணையம் ஆராய்ந்தது என்றாலும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று ஒன்றிய பாஜக அரசின் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். பொது சிவில் சட்டத்தை…
சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், திராவிடர்களைத் தவிர அனைவரும் வெளிநாட்டினர்தான் சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் பதிலடி
லக்னோ, பிப்.5 - “சூத்திரர்கள், தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் திராவிடர்களைத் தவிர இந்தியாவிலுள்ள மற்ற அனை வருமே வெளிநாட்டினர்தான்” என்று சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.டி. ஹசன் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடை பெற்ற…
