இதுதான் கடவுள் சக்தியோ? விநாயகர் சிலைக்கு அணிவித்த ரூ.10,000 பண மாலை திருட்டு! சென்னையில் 6 பேர் கைது!
சென்னை, செப்.19- விநாயகர் சிலைக்கு அணிவித்த 10 ஆயிரம் ரூபாய் பண மாலையை திருடிச் சென்றதாக 4 இளஞ்சிறார்கள் உட்பட 6 பேரை ஆர்.கே.நகர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3ஆவது தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (33).…
முதலமைச்சர் விஜய் தமிழ்நாட்டை அவமானப்படுத்திவிட்டார்! டி.ஆர்.பி. ராஜா காட்டம்!
சென்னை, செப்.19- திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா நேற்று (18-09-26) சென்னை அன்பகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தொழில் முதலீடு தொடர்பாக ஒவ்வொரு நாளும் தவெக அரசு ரீல் விடுகிறது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஆட்சிக்கு…
தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்! – உதயநிதி ஸ்டாலின்
சென்னை, செப்.19- தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளர். இது தொடர்பாக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- தனித்தன்மையுடன் இயங்குகிறது நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் அனுமதிப்பது தொடர்பான வழக்கில், "தமிழ்நாடு,…
பழுதானதால் படகில் கரை ஒதுங்கிய ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் எல்லை தாண்டியதாக அபராதத்துடன் விடுவிப்பாம்! இலங்கையின் அடாவடித்தனம்!
ராமேசுவரம், செப். 19- இயந்திரக் கோளாறு காரணமாகக் கடல் அலையில் சிக்கி இலங்கை எல்லைக்குள் கரை ஒதுங்கிய ராமேசுவரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களை அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயந்திரக் கோளாறு கடந்த வாரம் ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச்…
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயில் உண்டியல் கொள்ளையடிக்கப்பட்டது!
விருத்தாசலம், செப். 19- கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மணவாளநல்லூரில் உள்ள அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயிலில், நள்ளிரவில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கோயில் உண்டியலை உடைத்து ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கடந்த வெள்ளிக் கிழமை காலை வழக்கம்போல் கோயிலைத் திறக்க வந்த ஊழியர்கள், உண்டியல் உடைக்கப்பட்டுப் பணம்…
தந்தை பெரியாரின் 148ஆம் பிறந்தநாள்: முதலமைச்சர் ஜோசப் விஜய் மரியாதை! தலைமைச் செயலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!
சென்னை, செப்.19- தந்தை பெரியாரின் 148ஆவது பிறந்த நாள் 17.9.2026 அன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில் பெரியார் படத்துக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய், மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் முதலமைச்சர் தலைமையில் சட்டப் பேரவைத் தலைவர்…
செப். 17 தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தமிழ்நாடெங்கும் தோழர்கள் எழுச்சியுடன் மாலை வைத்து உறுதிமொழி ஏற்பு!
செப்டம்பர் 17 அன்று அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் விழா பக்ரைன் - செட்டிநாடு உணவகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழாவை காணொலி வாயிலாக மருத்துவர் சோம.இளங்கோவன் வாழ்த்தினார். அதன் பிறகு புலவர் அப்துல் கையூம் அய்யா பெரியார் பற்றி…
நன்கொடை
விடுதலை (ஓய்வு பெற்ற) பிழை திருத்துநுர் பம்மல் பொழிச்சலூரைச் சேர்ந்த கே.என்.துரைராஜ் அவர்கள் தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி (17.9.2026) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் ரூ.300 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.
கழகக் களத்தில்…!
20.9.2026 ஞாயிற்றுக்கிழமை தந்தை பெரியார் அறக்கட்டளை, முரம்பு ஒருங்கிணைக்கும் பெரியார்-அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் குருதிக்கொடை வழங்கும் விழா, பள்ளி மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா முரம்பு: காலை 8 மணி *இடம்: அன்னை திருமண மண்டபம், முரம்பு *தலைமை: சோ.ஞானராசு…
நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் சொ.மகாலிங்கத்தின் மகள் ம.அன்புச்செல்வி தனது கணவர் ந.சிவமணி அவர்களின் 16ஆவது நினைவு நாளை முன்னிட்டு (19.9.2026) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000/- நன்கொடை வழங்கியுள்ளார்.
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 19.9.2026
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * மம்தா, திரிணாமுல் காங்கிரஸ் பெயர் மற்றும் “பூவும் புல்லும்” சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். அக்டோபர் 6இல் நடைபெறும் இடைத்தேர்தலுக்காக இரு அணிகளுக்கும் புதிய பெயர், சின்னம் ஒதுக்கியதை…
வைக்கம் பெரியார் நினைவகத்தில் மலரஞ்சலி
சமூக நீதி நாளான தந்தை பெரியார் அவர்களின் 148ஆவது பிறந்த நாளினை முன்னிட்டு, கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் நினைவகத்தில் 17.09.2026 பாலா சார் ஆட்சியர் சாஹீனா ராமகிருஷ்ணன் பெரியாரின் உருவ படத்திற்கு மாலை…
