நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 20-ஆம் தேதி தொடங்குகிறது முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டம்

2 Min Read

புதுடில்லி, ஜூலை 13– நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 20-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக ஆலோசிக்க ஜூலை 19-ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சி னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் மக்களவையில் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத் துவதற்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் மூலம் மக்கள்தொகை அடிப் படையில் மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய முடியும். மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு கிடைக்காததால் இந்த மசோதாக்கள் மக்களவையில் தோல்வி அடைந்தன.

இந்நிலையில், மழைக்கால கூட்டத் தொடரில் மகளிர் இடஒதுக் கீட்டுக்கான மசோதாக்களை மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளது. கடந்த சில மாதங்களில் திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா (உத்தவ் அணி) கட்சிகளைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் பாஜகவுக்கு அணி மாறி உள்ளனர். இதனால் மக்களவை, மாநிலங்களவையில் பாஜகவுக்குக் கூடுதல் பலம் கிடைத்திருக்கிறது. இதர கட்சிகளின் ஆதரவோடு மகளிர் இடஒதுக்கீட்டுக்கான மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றிய அரசு வியூகம் வகுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப் பினர்களை குதிரை பேரம் மூலம் பாஜக இழுப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவைக் கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. இந்த விவகாரத்துக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பிரதமர், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்தால் அவர் களைப் பதவி நீக்க வகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டு உள்ளது.

இந்த மசோதா குறித்து நாடாளு மன்ற கூட்டுக் குழு ஆய்வு செய்தது. “குற்ற வழக்குகளில் பிரதமர், முதல மைச்சர்கள், அமைச்சர்கள் சிக்கி 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை நிரந்தரமாக பதவி நீக்கம் செய்யக்கூடாது. தற்காலிகமாக பதவி நீக்கலாம்” என்று நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

புதிய மசோதா அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இவை உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நாடாளுமன் றத்தில் பிரச்சினை எழுப்ப எதிர்க் கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

இந்தச் சூழலில் மழைக்கால கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஜூலை 19-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாட்டின் நலன் கருதி மக்களவை, மாநிலங்களவையைச் சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஆதரவு கோரப்படும் என்று ஒன்றிய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *