நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வலுவாகக் குரல் கொடுக்கும் ஆர்.ஜே.டி. எம்.பி. சுதாகர் சிங் பேட்டி

1 Min Read

புதுடில்லி, ஜூலை 13 நாடாளு மன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தொடரைச் சுமூகமாக நடத்துவது குறித்து விவா திக்க, வரும் 19ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ள நிலையில், பாஜ அரசுக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்ய எதிர்க் கட்சிகளின் ‘இண்டியா’ கூட்டணி தயாராகி வருகிறது.

இதுகுறித்து பீகார் மாநிலம் பக்சர் மக்களவை உறுப்பினரும், ராஷ்ட்ரிய ஜனதாதள (RJD) கட்சியின் தலைவருமான சுதாகர் சிங் நேற்று (12.7.2026) செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை உடைப்பதன் மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற பாஜ நினைக்கிறது. இதனை ‘இண்டியா’ கூட்டணி ஒன்றிணைந்து எதிர்க்கும்.

தேர்தல் முறை மீதான தாக்குதல்: எஸ்அய்ஆர் (SIR) நடவடிக்கை என்பது குடிமக்களின் வாக்குரிமை மீதான தாக்குதலாகும். வாக்காளர் பட்டியலைக் கைப்பற்றினால், தேர்தலையே கைப்பற்றி விடலாம். இத்தகைய நடைமுறைகள் நீடித்தால், இந்தியாவின் தேர்தல்கள் சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியாவில் நடைபெறுவது போல மாறிவிடும். இந்தியாவிலும் அவ்வாறு நடந்தால் ஜனநாயகம் என்பது வெறும் மாயை யாக மட்டுமே எஞ்சி இருக்கும்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப் படும் பிரச்சினைகள்: வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடரில் ஒன்றிய பாஜ அரசின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’, தொகுதி மறுவரை யறை மற்றும் எஸ்அய்ஆர் நடவடிக் கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வலுவாகக் குரல் கொடுக்கும்.

மேலும், ராமன் கோயில் நிதி முறைகேடு மற்றும் நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகளை இண்டியா கூட்டணி நாடாளுமன்றத்தில் எழுப்பி அரசை முடக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுதாகர் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *