மக்கள்தொகைக் கணக்கெடுப்பு: விதிகளை மீறும் அதிகாரிகளுக்கு 3 ஆண்டு சிறை
புதுடில்லி, மார்ச் 27 இந்தியா வில் நடைபெறவுள்ள 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகள் குறித்து, இந்தியப் பதிவாளர் ஜெனரல் முக்கிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கணக்கெடுப்புப் பணி யில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.…
பதவிக்காக இப்படியா?
திருச்சூர், மார்ச் 27 ‘கொஞ்சம் செல்வாக்கு மட்டும் இருந்தால் போதும்... எப்போது வேண்டுமானாலும், எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டம் பிடிக்கும் வசதி அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது...' என, கிண்டல் அடிக்கின்றனர், கேரள மக்கள். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, முதலமைச்சர் பினராயி…
இந்நாள் – அந்நாள்
எக்ஸ்ரேவைக் கண்டுபிடித்த வில்ெஹல்ம் கான்ராட் ரான்ட்ஜன் பிறந்த நாள் (27.3.1845) ரான்ட்ஜன் மார்ச் 27, 1845 அன்று ஜெர்மனியின் லென்னப் (Lennep) நகரில் பிறந்தார். இவர் ஒரு சிறந்த ஜெர்மானிய இயற்பியலாளர். நவம்பர் 8, 1895-இல், இவர் தற்செயலாக எக்ஸ்-கதிர்களை (X-rays)…
தவறான குற்றச்சாட்டுக்கு அய்யா தந்த அரிய விளக்கம்!
நான் காங்கிரசில் இருந்தபொழுது தோழர் அழகிரிசாமி என்னோடு பணிபுரிந்துவந்தார். நான் அரசியல் பணியிலிருந்து விலகி சமுதாயப்பணி புரியத் துவங்கிய 1924ஆம் ஆண்டிலிருந்து அவரை எனக்கு நன்கு தெரியும். அது முதல் 1948 வரையில் ஒரே நிலையில் பணியாற்றி வந்தார். அவரைப் போல்…
‘‘தளபதி அழகிரி” என்ற சுயமரியாதை – தொண்டறக் கடல் (7)
தளபதி அஞ்சாநெஞ்சன் அழகிரி வாழ்நாள் முழுவதும் சுயமரியாதைச் சமத்துவத்தை முழங்கினார். பிறகு அவரது கல்லறையும்கூட, ஜாதி ஒழிப்பு முழக்கத்தை முழங்க வைத்துத் தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புக்கான ஆயுதமாயிற்று என்பது இயக்க வரலாற்றுச் சிறப்புகளில் மகுடம் என்பதல்லவா? இதோ தந்தை பெரியார்…
கேரளத்தில் தேர்தல் ஆணையம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை!
கேரளத் தேர்தல் ஆணையம் தங்கள் அலுவலகத்தில் பா.ஜ.க. முத்திரை கடிதத்தைப் பயன்படுத்தி கட்சிகளுக்கு ஆலோசனை மற்றும் விதிமுறைகள் குறித்த தகவல் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் ஏப்ரல் 9-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி…
சமுதாய ஆதிக்கமே தேவை
நாம் வேண்டுவது அரசியல் ஆதிக்கமன்று; சமுதாய ஆதிக்கம்தான். சமுதாய ஆதிக்கம் என்றால் சமுதாயத்திற்கு எது நன்மை என்று நாம் கருதுகிறோமோ, எது நன்மையானது என்று நம் பகுத்தறிவு, உலகப் பகுத்தறிவு சொல்கிறதோ அதை மக்களுடைய எதிர்ப்பின்றிச் செய்யக் கூடுமான ஆதிக்கம் என்றுதான்…
பகுத்தறிவைத் தூண்டுவதே படிப்பின் நோக்கமாகட்டும்!
பேரன்புமிக்க தலைமை ஆசிரியர் அவர்களே, மாணவ ஆசிரியர்களே! நீங்கள் மாணவ ஆசிரியர்களாக இருந்தாலும் நீங்கள் வருங்காலத்தில் ஏராளமான மாண வர்களைப் பயிற்றுவிக்கப் போகின்றவர்கள் உங்களுக்கு ஏதாவது கூற விழைகின்றேன். நமது நாட்டில் படிப்பு அறிவுக்குப் பயன்படுவது என்பது மிகவும் கஷ்டமாகப் போய்விடுகின்றது.…
“பணம் கொண்டு சென்றால் இனி இந்த ஆதாரம் போதும்” தேர்தல் ஆணையம் அளித்த முக்கிய விலக்கு!
சென்னை, மார்ச் 27- தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் தீவிரச் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ. 50,000க்கும் அதிகம் எடுத்துச் செல்லப்படும் ரொக்க பணம் மற்றும் ஆவணங்கள் இல்லாத பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தேர்தல் சோதனை…
சிறார்களைத் தேர்தல் பரப்புரைக்குப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
சென்னை, மார்ச் 27- தேர்தல் பிரச்சாரத்தின் முக்கிய அங்கமான ‘சாலைக் காட்சி'களால் (Road Shows) பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடிக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. விதிகளை மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், வேட்பாளர்கள் மீது…
