வாக்கு எந்திரம் மோசடியா?
பா.ஜ.க. இத்தனை வாக்குகள் பெறும் என்று பா.ஜ.க. நிர்வாகி பதிவிட்டது எப்படி? நாடாளுமன்றத்தில் காரசார வாதம் புதுடில்லி, டிச .8 வாக்குப்பதிவு இயந்திரத்தில் சந்தேகம் இருப்பதாக எதிர்க்கட்சி மக்களவை உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அதற்கு ஆளுங்கட்சி மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற…
தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு டிச. 24க்கு மாற்றம்
சென்னை,டிச.8- "மிக்ஜாம்” புயலால் பெய்த பெருமழை - வெள்ளம் காரணமாக, சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக் குள்ளாகி, மழை - வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், வருகிற 17.-12.-2023 அன்று சேலத்தில் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்ட “தி.மு.க. இளைஞர் அணி…
50 வாக்குகள்கூட வாங்காதது எப்படி? – கமல்நாத் கேள்வி
போபால், டிச.8 மபி காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கூறுகையில்,' காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொந்த கிராமத்தில் 50 வாக்குகள் கூட பெறவில்லை என்று சொல்கிறார்கள். அது எப்படி சாத்தியம். இதுபற்றி ஆலோசனைகளை நடத்தாமல் ஒரு முடிவுக்கு வருவது சரியாக இருக்காது.…
முடிவுகள் வந்து 4 நாட்கள் ஆகியும் 3 மாநில முதலமைச்சர்கள் குறித்து முடிவெடுக்காமல் திணறும் பா.ஜ.க.!
புதுடில்லி, டிச.8 ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட் களாகிவிட்ட நிலையில் இம்மாநிலங் களில் முதலமைச்சர்கள் யார் என முடிவெடுக்க முடியாமல் பாஜக தத் தளித்து வருகிறது. தெலங்கானா, சத்தீஸ்கர், ம.பி, ராஜஸ்தான்…
பட்டியலின – பழங்குடி பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரிப்பு
புதுடில்லி,டிச.8- மோடி ஆட்சியில் பட்டியல் - பழங்குடி யினர் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக சைபர் குற்றங்கள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித் துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம், ஆண்டு குற்ற அறிக்கையையும், இந்தியாவில் விபத்து மரணங்கள்…
காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் சந்திப்பு
புதுடில்லி, டிச.8- புதுடில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில், 'இந்தியா' கூட்டணியின் 17 கட்சிகளைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை தலைவர்கள் 6.12.2023 அன்று சந்தித்து பேசினர். இந்த கூட்டத்துக்கு கார்கேயும், ராகுல் காந்தியும் தலைமை வகித்தனர். இது தொடர்பாக…
மாறி மாறி போட்டோதான் எடுக்குறீங்க! உங்கள் சாப்பாடே வேண்டாம்!
வேளச்சேரி வெள்ளம்... அண்ணாமலையிடம் சீறிய பெண்! சென்னை, டிச.8 சென்னை வேளச்சேரியில் உணவு கொடுக்க சென்ற பா.ஜ.க. தலைவர் அண்ணா மலையிடம் பெண் ஒருவரும் பின்னர் அங்கிருந்த பொதுமக்க ளும் கோபமாகப் பேசிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. பா.ஜ.க.…
சென்னை இயல்பு நிலைக்கு திரும்புகிறது
அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா எச்சரிக்கை சென்னை, டிச.8- வெள்ளப் பாதிப் புகளை பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா…
புரோகிதமற்ற திருமணங்கள்
மதத்திலுள்ளவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? “ஜாதித் தடை காரணமாகத் திருமணம் செய்து கொள்ள முடியாமலிருப்பவர்களுக்கு, சர்க்கார் தனிச் சலுகை காட்டி, பெற்றோர் சொத்திலும் உரிமை பெறும்படியாகச் செய்வோம்” என்று நாளைக்கு ஒரு சட்டம் வருமேயானால் ஒரே மாதத்தில் இந் நாட்டில் ஓர்…
உலகம் வளர்ச்சி அடையாததற்கு காரணம்
உலக மாறுதலை வளர்ச்சிக்குப் பயன்படாமல் செய்வதும், மனிதனுக்கு உள்ள அறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கு கவலையற்ற வாழ்வுக்கு உதவாமல் செய்வதும் பெரிதும் கடவுள், கடவுள் சக்தி, கடவுள் செயல் என்பவை போன்ற முட்டாள்தனமான கருத்துகளும் ‘நம்பிக்கை’யுமேயாகும். கடவுள் எண்ணமோ மனித சக்திக்கு…
பெண்ணுரிமை
ஏதோ சில சந்தர்ப்பங்களில் மண மான இந்துப் பெண்கள் கணவனிட மிருந்து வாழத் தனி இடமும், ஜீவனாம்ச மும் பெற உரிமை தரும் சட்டம் ஒன்று 04.02.1946-இல் மத்திய சட்டசபையில் நிறைவேறியுள்ளது. இது உதவாக்கரைச் சட்டம் என்பதைக் கீழே விளக்கியுள் ளோம்.…
சத்தீஸ்கர்: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 90 எம்.எல்.ஏ.க்களில் 17 பேர் மீது குற்ற வழக்குகள்
ராய்ப்பூர், டிச. 8- சத்தீஸ்கர் சட்டப்பேர வைக்கு அண்மையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 90 பேரில் 17 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது, அவர்கள் வேட்புமனுவுடன் சமர்ப் பித்த பிரமாணப் பத்திரம் மூலம் தெரியவந்துள்ளது. இவர்களில் 6 பேர்…
