ஸ்பெயினுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு

1 Min Read

மாட்ரிட், ஆக. 8- ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற சட்டவிரோத அகதிகள் 100 பேர் உயிரிழந்தனர்.

அய்ரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்பெயின். இந்நாட்டின் அருகே வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இரு நாடுகளுக்கும் இடையே மத்திய தரைக்கடல் உள்ளது. அதேவேளை, ஸ்பெயின் நாட்டுக்கு சொந்தமான தன்னாட்சி பெற்ற பகுதி சீயடா. இந்த நகரம் மொராக்கோவுடன் எல்லையை பகிர்கிறது. இது வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. சீயடா மொராக்கோவுடன் நிலம், கடல் வழியாக எல்லையை பகிர் கிறது.

இதனிடையே, கடந்த மாதம் 30, 31 ஆகிய இரு தேதி களில் மொராக்கோவிலிருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் கடல் வழியாக ஸ்பெயினின் சீயடா நகருக்குள் சட்டவிரோதமாக நுழைந்தனர். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொராக்கோ நாட்டினர் திடீரென ஸ்பெயினுக்குள் நுழைந்தனர். இந்த சம்பவம் அய்ரோப்பாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஸ்பெயினின் சீயடா நகருக்குள் கடல் வழியாக மொராக்கோவை சேர்ந்த சட்டவிரோத அகதிகள் ஆயிரக்கணக்கானோர் நுழைந் தனர். அப்போது கடலில் மூழ்கி யும், கரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலிலும் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்து உள்ளது.

அதேவேளை, ஸ்பெயினுக்குள் நுழைந்தவர்களை மீட்டும் மொராக் கோவுக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது. இதுவரை 75 ஆயிரம் பேர் ஸ்பெயினில் இருந்து மீண்டும் மொராக்கோவுக்கே அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இன்னும் 5 ஆயிரம் பேர் ஸ்பெயினின் சீயடா நகரில் இருப்பதால் அவர்களையும் மொராக்கோவுக்கு திருப்பி அனுப்பும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *