கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 8.8.2026

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தொகுதி மறுவரையறை: பிரதமர் மோடி–முதலமைச்சர் ஷிண்டே சந்திப்பை தொடர்ந்து, தொகுதி மறுவரையறை மசோதா குறித்த பரபரப்பு அதிகரித்துள்ளது.தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

* தொகுதி மறுவரையறைக்கு தி.மு.க. எதிர்ப்பு: தொகுதி மறுவரையறை திட்டத்தை திமுக எதிர்ப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கட்டுப்பாட்டில் முன்னிலை வகித்த தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கக் கூடாது என வலியுறுத்தினார்.

* எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) எரிபொருள் விவகாரத்தில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

* நீட் வினாத்தாள் கசிவில் தேசிய தேர்வு முகமை (NTA) மீது சிபிஅய் குற்றச்சாட்டு:  நீட் வினாத்தாள் கசிவில் என்.டி.ஏ-வின் பாதுகாப்பு குறைபாடுகளை சிபிஅய் சுட்டிக்காட்டியுள்ளது. சிசிடிவி மற்றும் வினாத்தாள் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என தெரிவித்தது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ரூ.1,377 கோடி ஆழ் தொழில்நுட்ப நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு குறித்து மாநிலங்களவை உறுப்பினர் கேள்வி. நிதி பெற்ற 22 நிறுவனங்களில் 15 நிறுவனங்களுக்கு தேர்வுக் குழு உறுப்பினர்களுடன் முதலீட்டுத் தொடர்பு இருந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்ட விசாரணை தெரிவிக்கிறது.

தி இந்து:

* தகவல் அறியும் சட்டத்தை முடக்கும் வகையில் தரவுப் பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தப்படுகிறதா? – உச்சநீதிமன்றம் கேள்வி

* அனைத்து தரவுகளையும் ‘தனிப்பட்ட தகவல்’ எனக் கருதி ஆர்.டி.அய். சட்டத்தை முடக்கும் வகையில் டி.பி.டி.பி. சட்டம் பயன்படுத்தப்படுகிறதா என்பதை உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்ய உள்ளது.

* பீகார் மாதிரிப் பள்ளிகளுக்கு ‘காவி’ நிறம்: பீகாரில் 551 மாதிரிப் பள்ளிகளுக்கு ‘சரஸ்வதி வித்யா நிகேதன்’ எனப் பெயர் மாற்றி, சூரிய உதயத்தை ஒத்த காவி நிறத்தில் சுவர்களுக்கு வர்ணம் பூச அரசு உத்தரவு.

*முஸ்லிமாக மதம் மாறியோருக்கான இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பு விரைவில் முஸ்லிமாக மதம் மாறிய பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசின் அதிகாரம் தொடர்பான மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க முடிவு.

தி டெலிகிராப்:

* முழுநேர கல்வி அமைச்சரை ஒன்றிய அரசு நியமிக்க வேண்டும்; மகாராட்டிரா முதலமைச்சர் பட்னாவிஸை டில்லிக்கு அழைக்கும் வாய்ப்பை ஏற்க முடியாது என பிருத்விராஜ் சவான் தெரிவித்தார். இத்தகைய நியமனத்தை ஜென் இசட் மக்களும் காங்கிரஸும் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* “உங்களிடமிருந்து எந்த சான்றிதழும் அவர்களுக்குத் தேவையில்லை” என ஆர்.எஸ்.எஸ். தலைவர் பாகவத்தின் ஜென் சி பிரச்சாரத்துக்கு பிரியங்கா காந்தி பதிலடி. ஆர்.எஸ்.எஸ். – பாஜக இளைஞர்களை தவறாக வழிநடத்தி, வெறுப்பை புதிய வடிவில் பரப்புவதாக கருநாடக காங்கிரஸ் அமைச்சர் பிரியங்க் கார்கே குற்றச்சாட்டு.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *