செய்தியும், சிந்தனையும்…!
தீட்சிதர்களிடமிருந்துதானே...! l சிதம்பரம் நடராஜர் கோவில் சொத்துகளை மீட்க நடவடிக்கை. * அர்ச்சர்களான தீட்சிதர்களிடம் இருந்துதானே!
90 விழுக்காடு மக்களின் நலனுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: ராகுல் காந்தி
அலகாபாத், அக் 6- இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியதன் அவசியத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் 90 விழுக்காடு மக்கள் நிர்வாக அமைப்பைவிட்டு விலகி வெளியே இருப்பதாகவும், அவர்களுக்காக இந்த கணக்கெடுப்பு அவசியம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்…
தோ்தல் பத்திரங்கள் ரத்து தீா்ப்பை மறுஆய்வு கோரிய மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி
புதுடில்லி, அக். 6- தோ்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி பிறப்பித்த தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ‘மறு ஆய்வு மனுவை நீதிபதிகளின்…
ராஜஸ்தான் துணை முதலமைச்சர் மகன் போக்குவரத்து விதிமீறல்: ரூ. 7,000 அபராதம்
ஜெய்ப்பூர், அக். 6- ராஜஸ்தானின் துணை முதலமைச்சா் பிரேம் சந்த் பைா்வாவின் மகன், போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிய காணொலி இணையதளத்தில் வேகமாக பரவியதையடுத்து, மாநில போக்குவரத்துத் துறை அவருக்கு ரூ. 7,000 அபராதம் விதித்தது. ஜெய்பூரின் ஆம்பா் சாலையில்…
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 15இல் தொடங்கும் இந்திய வானிலை ஆய்வு மய்யம் அறிவிப்பு
சென்னை, அக்.6- தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த ஆக.30ஆம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் பருவமழை தீவிர மடையவில்லை. ஜூன், ஜூலை மாதங்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்திருந்தது. ஆண்டுதோறும் வழக்கமாக வேளாண் பாசனத்துக்காக ஜூன் 12ஆம் தேதி அணையிலிருந்து நீர்…
குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களை அடையாறு நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி
நேற்று (05.10.2024) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் 2024-2025ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களை அடையாறு நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்…
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீட்டு அளவை உயர்த்த வலியுறுத்தல்
மயிலாடுதுறை, அக். 6- தாழ்த்தப்பட்ட ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி தாழ்த்தப்பட்ட இனமக்களுக்கான இட ஒதுக்கீட்டு அளவை உயா்த்த வேண்டும் என்று மயிலாடுதுறையில் நடை பெற்ற கருத்தரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது. தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கான உள் இடஒதுக்கீடு: ‘எதிர் கொள்ளும் சவால்களும், சிக்கல்களும்’…
50 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதாக ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப் பதிவு
பெங்களூரு, அக். 6- பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ.50 கோடி கேட்டு மிரட்டியதாக ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மீது காவல்துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெங்களூருவில் உள்ள தாசரஹள்ளியை சேர்ந்த தொழிலதிபர் விஜய் டாடா (44). இவர் 2018ஆம் ஆண்டு…
சுரண்டையில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா – தெருமுனைக்கூட்டம்
சுரண்டை, அக். 6- தென்காசி மாவட் டம் சுரண்டையில் 26.09.2024 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் விழா தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. கழகப் பேச்சாளர் தேவ. நர்மதா சிறப்பு ரையாற்றினர். தந்தை பெரியார் அவர்கள் இறந்து அம்பது ஆண்டுகள் கடந்தும் இன்றைக்கு இன…
ஆலங்குளத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா தெருமுனைக்கூட்டம்
ஆலங்குளம், அக். 6- தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 27.09.2024 அன்று தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. கழக பேச்சாளர் தேவ. நர்மதா சிறப்புரையாற்றினார். திமுக மேனாள் நகரச் செயலாளர் பாப்புலர் செல்லத் துரை, விடுதலைச் சிறுத்தைகள்…
