வி.சி.க. வேட்பாளர்கள் தேர்வில் எந்த உள்நோக்கமும் இல்லை : தொல்.திருமாவளவன்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஏப்.2 விசிக வேட்பாளர்கள் தேர்வில் எந்த உள்நோக்கமும் இல்லை என அக்கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தேர்தலையொட்டி விசிக தலைவர் தொல். திருமாவளவன் முகநூலில் பேசியதாவது: விசிக வேட்பாளர்கள் 8 பேரும் இன்று (2.4.2026) வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறோம். விசிக சார்பில் விருப்ப மனு பெற்றது மூலம் 1 கோடிக்கு மேல் கட்சி வங்கிக்கு வந்து சேர்ந்தது. இது 8 வேட்பாளர்களுக்கும் முதல் கட்டமாக 10 லட்சம் பிரித்து அளிக்கப்பட்டது. மேலும் புதுச்சேரியில் போட்டியிடும் 4 வேட்பாளர்களுக்கு தலா 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்களை நான் மிகவும் நேசிக்கிறேன். 4 சட்டமன்ற உறுப்பினர்களும் சிறப்பாகப் பணியாற்றினர். விசிகவிற்கு அவர்கள் பெருமை சேர்த்துள்ளனர். நன்றாகப் பணியாற்றியவர்களுக்கு ஏன் இந்த முறை சீட் வழங்கவில்லை என்ற கேள்வி எழுவது இயல்புதான். ஆனால் இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஒரு முறை கூட சீட் தரவில்லை என்று எத்தனையோ நபர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி, ஆண்களுக்கு மட்டும் தருவீர்கள், பெண்களுக்கு தர மாட்டீர்களா என்ற கேள்வி, நிர்வாகிகளுக்கு மட்டும் இல்லாமல் அதற்குக் கீழ் உள்ளவர்களுக்கும் தரக் கூடாதா என்ற கேள்வி என பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கியது என்ற என் முடிவை அவர்கள் யாரும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆளூர் ஷாநவாஸ் எங்கு பேசினாலும் அது நம் கட்சிக்கு வலு சேர்க்கும். நாகை மீண்டும் கிடைத்திருந்தால் ஆளூர் ஷாநவாஸுக்கே தந்திருப்பேன். ஆனால் அது ஜவாஹிருல்லாவுக்கு சென்றுவிட்டது. விசாரித்ததில் ஆளூர் ஷாநவாஸ் ராயபுரத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். அவருக்காக நான் சீட் கேட்டேன். அதற்குப் பிறகு பல்லாவரம் வேண்டும் என்று கேட்டார். ஆனால் அது தே.மு.தி.க.விற்கு சென்று விட்டது.

ஷாநவாஸ் கூடாது, அவரைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்ட முடிவு இல்லை. அப்துல் ரகுமானுக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்ற எண்ணத்தில் கொடுக்கப்பட்டது. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. எஸ்.எஸ். பாலாஜி என் தலைமை மீது நம்பிக்கை வைத்து, என் முடிவை அவருக்கு நியாயம் தெரியும் என்ற நம்பிக்கையில் எடுத்த முடிவு.

எனவே விசிக வேட்பாளர்கள் தேர்வில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ். பாலாஜி, பனையூர் பாபு ஆகியோர் தங்கள் மன வேதனையை என்னிடம் தெரிவித்தார்கள். இருப்பினும் இதற்குப் பிறகு கட்சிப் பொறுப்பு ஏற்று பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் முகநூலில் தோழர்கள் எழுதக் கூடாது. இவ்வாறு தொல். திருமாவளவன் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *