அதிகாரம் மாறுகிறது பாகிஸ்தானில் உச்சபட்ச அதிகாரத்தைக் கைப்பற்றிய ராணுவ தளபதி
இஸ்லாமாபாத், நவ.13- பாகிஸ்தானுக்கும், ராணுவ புரட்சிக்கும் எப்போதும் தொடர்பு உண்டு. அயூப்கான் முதல் முஷ்ரப் வரை, பாகிஸ்தான் உருவானது முதல் இன்று வரை பல ராணுவ சர்வாதிகாரிகளை அந்த நாடு பார்த்து இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ராணுவத்தின் கட்டுப்பாட்டை மீறி…
ஃபுங்-வாங் புயலால், தைவான் நாட்டின் கடலோர, மலைப் பகுதிகளில் இருந்து 8 ஆயிரம் பேர் வெளியேற்றம்!
தைபே, நவ.13- தெற்கு சீன கடலில் உருவாகியுள்ள ஃபுங்-வாங் புயலால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தைவான் நாட்டின் கடலோர, மலைப் பகுதிகளில் இருந்து 8,300 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இப்புயலின் தாக்கத்தால் ஃபிலிபைன்ஸ் நாட்டில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். ஃபுங்-வாங் புயல் பாதிப்புகள் குறித்து…
வாயால் வடைசுடும் நினைப்பா? குறுகிய நாட்களில் இவ்வளவு கோடி பேரை எப்படி சேர்ப்பீர்கள்? எஸ்அய்ஆர் பற்றி அமைச்சர் பிடிஆர் விளாசல்
மதுரை, நவ.13- வாயில் வடை சுடுவது சுலபம், எஸ்அய்ஆர் செயல்படுத்துவது கடினம் என அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் காட்டமாக கூறியுள்ளார். மதுரை, ஆரப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட முகாமை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை…
நன்கொடை
ஈரோடு மாவட்டம் கோபி கழக மாவட்டம் பெ.மேட்டுப்பாளையம் மாவட்ட துணைத் தலைவர் பொன்.முகிலன் -செல்வி ஆகியோரின் மகன் அன்பு செல்வனின் 23ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 13.11.2025 திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூபாய் ஆயிரம் நன்கொடை வழங்கினார்கள்.
நன்கொடை
தாராபுரம் கழக மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கணியூர் தோழர் ச.ஆறுமுகம் (தாராபுரம் மாவட்ட கழகத் துணைத் தலைவர்) பெரியார் உலகத்திற்கு 59 ஆவது தவணையாக இம்மாதத்திற்கான ரூபாய் 1000 வழங்கியுள்ளார்.
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 13.11.2025
இந்தியன் எக்ஸ்பிரஸ்: * "இந்தியக் குடிமக்களை - படித்தவர்களைக் கூட - பயங்கரவாதிகளாக மாற்றும் சூழ்நிலைகள் என்ன என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்" செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நடந்த சில நாட்களுக்குப் பிறகு, மேனாள் ஒன்றிய உள்துறை அமைச்சர்…
பெரியார் விடுக்கும் வினா! (1812)
அனேக பிள்ளைகள் “பக்தியோடு கடவுளை வழிபட்டால் தேர்வில் தேர்ச்சி பெற்று விடலாம்” என்று சரியாகப் படிக்காமல், தேர்வு எழுதினால் தேர்வில் எப்படி வெற்றி பெற முடியும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
மயிலாடுதுறை மாவட்ட கழகக் கலந்துரையாடல்
மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் 11.11.2025 நண்பகல் 12 மணியளவில் நடைபெற்றது. திருச்சி சிறுகனூரில் நடைபெற்று வரும் ‘பெரியார் உலக’ கட்டுமானப் பணிக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் 10 லட்சம் ரூபாய்…
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.10 லட்சத்திற்கும் கூடுதலான நிதியைத் திரட்டித் தர விழுப்புரம் மாவட்ட கழகக் கலந்துரையாடலில் தீர்மானம்
விழுப்புரம், நவ. 13- 7.11.2025 அன்று காலை 11 மணி அளவில் விழுப்புரம் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையேற்று கலந்துரையாடலின் நோக்கங்களை விளக்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக நகரத் தலைவர் ராசேந்திரன் கடவுள்…
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.10 இலட்சம் நிதி வழங்க புதுக்கோட்டை மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு
புதுக்கோட்டை, நவ. 13- பெரியார் உலகத்திற்கு ரூ.10 இலட்சம், இதுதான் ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சி இதுதான் திராவிடம் -திராவிடமாடல்ஆட்சி தொடர்பரப்புரைகூட்டம், தமிழர் தலைவரின் 93ஆவது பிறந்தநாள் விழா - குருதிக்கொடை, விடுதலை சந்தா வழங்கல் என சிறப்பாக நடத்துவது குறித்து புதுக்கோட்டை மாவட்ட…
