பெரியார் விடுக்கும் வினா! (1585)
நாங்கள் சமுதாயச் சீர்திருத்தத் தொண்டு செய்கிறவர்கள் என்றால், மக்களுடைய இன்றைய அறிவையே மாற்றி வைக்கப் பாடுபடுகின்றோம். மக்களுடைய அறிவைத் தீட்டிப் பதப்படுத்துகின்றோம். மக்கள் அறிவு பெறாமல் இருக்கத்தக்க காரியத்தை செய்கின்ற மற்றவர்கள் எல்லாம் எப்படி மக்கள் தொண்டு செய்பவர்கள் ஆவார்கள்? -…
ஹிந்தி ஆதிக்கத்திலிருந்து இந்திய மொழிகளைக் காத்து நிற்பது திராவிட இயக்கத்தின் மொழிக் கொள்கைதான்!
தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக்கிட வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்! சென்னை, மார்ச் 7 ‘‘ஹிந்தி ஆதிக்கத்திலிருந்து இந்திய மொழிகளைக் காத்து நிற்பது திராவிட இயக்கத்தின் மொழிக் கொள்கைதான்! தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் இந்திய…
குடும்பமே அழிந்தது.. இது ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கை
ஆன்லைனில் ரூ.50 லட்சம் கடன் வாங்கி தலைமறைவான பிரேம் என்பவரின் மனைவி, மகன், மகள் தற்கொலை செய்துகொண்டனர். இதைக் கேட்டு இதற்குமேல் வாழ்ந்து என்ன செய்வது என நினைத்த பிரேம் கரூர் அருகே ரயிலில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டார். மக்களே…
ஒடிசாவில் அரசுப் பள்ளிகளுக்கு காவி வண்ணமா? பிஜு ஜனதா தளம் எதிர்ப்பு
புவனேஸ்வரி, மார்ச் 7 பள்ளிக் கூடங்களின் பச்சை வண்ணத்தை நீக்கி காவி வண்ணத்தைத் திணிக்கின்ற ஒடிசா மாநில பா.ஜ.க. அரசின் செயலுக்கு எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டமன்றத்…
அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவிகிதம் இடஒதுக்கீடு கருநாடக அரசு முடிவு!
பெங்களூர், மார்ச் 7 அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க கருநாடக அரசு முடிவெடுத் துள்ளது. இடஒதுக்கீடு கருநாடகத்தில் பொதுக் கொள் முதல் சட்ட வெளிப் படைத் தன்மையின் கீழ் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கொண்டு வரப்பட வுள்ளதாக சட்டப்…
பாசிஸ்டுகளுக்குத் துணைபோகும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை!
தொல்லியல் ஆராய்ச்சி என்ற பெயரில், பல நூற்றாண்டுகள் பழைமையான இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் நுழைந்து, கலவரங்களை ஏற்படுத்த எத்தனிக்கும் இந்துமத வெறியர்களுக்குத் துணை போகும் வகையில் தொல்லியல் துறையின் செயல்பாடுகள் இருக்கின்றன. இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை (ASI) செயல்பாடுகள், அதன் மதரீதியான…
பார்ப்பனர்கள் மாநாட்டில் பார்ப்பன நீதிபதி பங்கேற்பதா?
நீதிபதிகளாக இருக்கக் கூடியவர்கள், ஜாதி, மத, அரசியல்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான் சட்டத்தின் நிலைப்பாடு. ஆனால் ஒன்றிய அதிகாரத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு எல்லாம் தலைகீழாக மாறி வருகிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருக்கக் கூடியவர்களே ‘பிராமண சங்க மாநாடுகளில்’’…
குலத் தொழிலுக்குத் தலை முழுக்கிடுக!
எப்பாடுபட்டாவது மக்களைப் படிக்க வைத்து வசதி செய்து கொடுத்துத் தகப்பன் வேலையைவிட்டு ஜாதி வேலையை விட்டு, வேறு வேலைக்கு அனுப்ப வேண்டும். எந்தத் தலைமுறையும் தன் ஜாதி வேலைக்கே வராமல் செய்வது தான் முக்கியக் கடமை ஆகும். - (‘விடுதலை’, 9.5.1961)
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் நியமணம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை நேரில் சந்தித்து உரையாடினார் (சென்னை, 6.3.2025)
சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் சிட்னி, பிரிஸ்பேன், கேன்பெர்ரா, மெல்போர்ன் நகரங்களில் நமது பரப்புரை!
* பெரியாரை உலகமயமாக்கும் திட்டத்தில் நமது ஆஸ்திரேலிய பயணம்! * தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் கொள்கைகள் பரப்புரை! * உலகம் முழுவதும் பெரியாரிய தோழர்களின் ஆர்வம் – ஒத்துழைப்பு மிகவும் பெரிது! ஏப்ரலில் தமிழ்நாடு முழுவதும் சுழன்றடிக்கும் பிரச்சாரத் திட்டம்!…
