ஆதிதிராவிடர், பழங்குடியினர் உணவக மேலாண்மைக் கல்வி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தகவல்
திருப்பத்தூர், மார்ச் 8 ஆதிதிராவிடா் மற்றும் பழங் குடியினா் தாட்கோ மூலம் உணவக மேலாண்மை (ஹோட்டல் மேனேஜ்மெண்ட்). கல்வி கற்கலாம். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு முடித்தவா்களுக்கு பி.எஸ்சி., (விருந்தோம்பல் மற்றும் ஓட்டல் நிா்வாகம்) 2 ஆண்டு…
வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் எண்ணிக்கை சிறு நகரங்களில் அதிகரிப்பு ஆய்வறிக்கையில் தகவல்
புதுடில்லி, மார்ச் 8 நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயா்ந்திருப்பதாக தனியாா் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. ‘அப்னா.கோ’ வேலைவாய்ப்பு தளத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு…
பிற இதழிலிருந்து…
மகளிர் பாதுகாப்பில் புதிய மைல்கல்! கல்வி நிலையங்கள், பணியிடங்கள் மற்றும் பயணங்களின்போது பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை பெண்களும் குழந்தைகளும் சந்தித்து வருகின்றனர். அவர்களை எதிர்பாராத துன்பங்களில் இருந்து பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகளும், காவல்துறையும், மகளிர் ஆணையம் உள்ளிட்ட…
உலக மகளிர் நாள் பெண்கள் முன்னேற்றத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் செய்த அரும் பெரும் சாதனைகள்
சென்னை, மார்ச்.8- மகளிர் நாளை கொண்டாடும் வேளையில் பெண்கள் முன்னேற்றத்துக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த சாதனை திட்டங்கள் என்னென்ன? என்பதை தமிழ்நாடு அரசு பெருமிதத்துடன் பட்டியலிட்டு விளக்கியுள்ளது. புரட்சிகர திட்டங்கள் தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொரு ஆண்டும்…
பக்தியின் பெயரால் உயிருக்கு உலை வைப்பதா?
‘‘மக்களை மக்கள் எந்தக் காரியத்திற்கு வேண்டுமானாலும் மன்னிக்கலாம். ஆனால் அறிவைக் கெடுக்கும் காரியம் எவ்வளவு சிறிதானாலும், அது மன்னிக்கப்பட முடியாததேயாகும். தமிழர்களையும் நான் வேண்டிக் கொள்வது என்னவென்றால், எந்தக் காரியத்திற்கு இணங்கினாலும் அறிவைக் கெடுக்கும் காரியத்திற்கு மாத்திரம் கண்டிப்பாய் ஒத்துழைக்கக் கூடாதென்று…
ஜாதியை ஒழிக்க வழி
ஜாதியை ஒழிப்பதற்குப் பல அடிப்படையான முறைகள் இருக்கின்றன. ஜாதிப்பட்டங்கள் (அய்யர், முதலியார், பிள்ளை, அய்யங்கார், செட்டியார், நாயுடு, நாயக்கர்,ரெட்டியார், நாடார் முதலியன) சட்டபூர்வமாகத் தடுக்கப்பட வேண்டும்! புதிதாக மணம் புரிவோர் அத்தனை பேரும் கலப்பு மணம் செய்யுமாறு தூண்டக்கூடிய சட்டங்கள் இயற்றப்பட…
மூடநம்பிக்கையின் உச்சம்: குடும்ப பிரச்சினை தீர 5 வயது சிறுமி நரபலி!
பனாஜி, மார்ச் 8 அறிவியல் உலகு நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் இன்னும் சில இடங்களில் மூடநம்பிக்கை மாறாமல் இருப்பது வேதனையின் உச்சமாக உள்ளது. அந்த மூடநம்பிக்கையால் சிறுமிகளின் உயிர்கள் பலி போவதும் தொடர்கதையாகி வருகிறது. அதன்படி, கோவாவில்…
நடிகரும், இயக்குநருமான சந்தான பாரதியின் படம்! மீண்டும் குழம்பிய பா.ஜ.க. தொண்டர்கள்!
அமித்ஷாவையே தெரியாத பி.ஜே.பி.யினர்! அமித் ஷாவுக்காக ஒட்டப்பட்ட சுவரொட்டியில் ராணிப்பேட்டை, மார்ச் 8 ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (CISF) ஆட்சேர்ப்பு பயிற்சி மய்யம் (RTC) செயல்பட்டு வருகிறது. மத்திய தொழில்துறை பாதுகாப்பு படைக்காக தேர்வு…
நீக்கம்
ஒன்றிய பா.ஜ.க. அரசின் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்ட அ.தி.மு.க. மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார், கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு…
திருச்சிமாவட்டம் கல்லக்குடி சமத்துவபுரத்தில் விநாயகன் கோயில் கட்டுமானப் பணி மும்முரமாக நடைபெறுகிறது. இது பெரியார் நினைவு சமத்துவபுர விதிகளுக்கு எதிரானது. எந்த மத வழிபாட்டுச் சின்னங்களுக்கும் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் இடம் கூடாது என்பது விதிமுறை.
