கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 25.3.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து விட்டு, குற்ற உணர்ச்சியோ, கூச்சமோ இல்லாமல் எடப்பாடி பழனிசாமி இஸ்லாமிய விழாக்களில் கலந்து கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம். * நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தமிழ்நாட்டு எம்பிக்கள்…
பெரியார் விடுக்கும் வினா! (1599)
பொது ஸ்தாபனங்களில் பக்குவம் அடைவதற்கு முன்பு மக்களுக்குப் பொறுப்பை கொடுக்கும் நிலையில், அவ்வித ஸ்தாபனங்களில் ரகளை, காலித்தனங்கள், முறைகேடுப் புகார்கள் எழாமலிருக்குமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
நகராட்சி – பேரூராட்சி – ஊராட்சி பகுதிகளில் கிளைக் கழகங்கள் அமைக்கப்படும் திருவள்ளூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
திருவள்ளூர், மார்ச்25- 9.3.2025 அன்று திருவள்ளூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் பொதட்டூர் புவியரசன் இல்லத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மா.மணி தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட செயலாளர். கோ. கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். துவக்கவுரை பொதட்டூர் புவியரசன் வழங்கினார். பிறகு மாநில…
27.3.2025 வியாழக்கிழமை திராவிடர் கழக தீர்மான விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
காரனோடை: மாலை 6 மணி < இடம்: காரனோடை கடைவீதி < வரவேற்புரை: ந.கஜேந்திரன் < தலைமை: சோழவரம் ப.சக்கரவர்த்தி (மாவட்ட இளைஞரணி தலைவர்) < முன்னிலை: புழல் சோமு, பெருங்காவூர் சண்முகம் < தொடக்கவுரை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர்…
14 வயதுடைய இளம் சிறுமிகளுக்கு கருப்பைவாய் புற்றுநோயை தடுப்பதற்கு தடுப்பூசி போடப்படும் சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, மார்ச் 25- 14 வயதுடைய இளம் சிறுமிகளுக்கு கருப்பைவாய் புற்றுநோயைத் தடுப்பதற்கு தடுப்பூசி போடப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச் சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருவள்ளுர் சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர்…
ஆஸ்திரேலியா தோழர்களுக்குப் பாராட்டு! வந்தார்! கண்டார்!! வென்றார் !!!
தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் ஆஸ்திரேலியா பயணம் மாபெரும் வெற்றி! வந்தார்! கண்டார்!! வென்றார்!!! தோழர் மகிழ்நன் சேலம் அண்ணாமலையார் அவர்களது புதல்வர். அம்மா அருள்மொழியின் அண்ணன். இவர்களது சிறப்பு ஏற்பாட்டில் ஆஸ்தி ரேலியாவின் முக்கிய நகரங்களான சிட்னி, மெல்போர்ன்,…
மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் மக்களவையில் தமிழ்நாட்டு எம்.பி.க்கள் புகார்
புதுடில்லி, மார்ச் 25 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக மக்களவையில் தமிழ்நாட்டைச் சோ்ந்த எம்.பி.க்கள் புகாா் தெரிவித்தனா். கடன் சுமை மக்களவையில் 2025-2026 நிதியாண்டுக்கான நிதி மசோதா மீதான விவாதம் 24.3.2025 அன்று நடைபெற்றது. இதில் சிதம்பரம்…
கல்வித்துறை ஆா்.எஸ்.எஸ். வசம் சென்றால் இந்தியாவை அழித்துவிடுவார்கள் : ராகுல் குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச் 25 கல்வித்துறை முழுமையாக ஆா்.எஸ்.எஸ். வசம் சென்றால் இந்தியா என்ற நாட்டையே அழித்து விடு வார்கள் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். ஆர்ப்பாட்டம் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக ‘இண்டியா’ அணியில் உள்ள…
நன்கொடை
தமிழ்நாடு பொதுப் பணித் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறியாளர் கே.பி. கோவிந்தசாமி பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்திற்கு ரூ.5000 (ரூ. அய்ந் தாயிரம்) நன்கொடை 24.3.2025 அன்று வழங்கினார்.
‘விடுதலை’ மற்றும் ‘உண்மை’ ஏடுகளுக்கு ஆண்டு சந்தா
ஆவடி மாவட்ட கழகத் துணைத் தலைவர் மு.இரகுபதி-ராணி இணையரின் வாழ்விணையேற்பு 52ஆம் ஆண்டு மணவிழா நாளை (11.3.2025) முன்னிட்டு ‘விடுதலை' மற்றும் ‘உண்மை' ஏடுகளுக்கு ஆண்டு சந்தாவிற்கு உரிய தொகையான ரூ.2,900த்தை ஆவடி மாவட்ட கழக துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன்,…
