சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு
திருச்சி, ஆக. 13- ஹோலி கிராஸ் கல்லூரி வளாகத்தில், சிலம்ப உலகச் சம்மேளனம் அமைப்பு நடத்திய பன்னாட்டு அளவிலான சிலம்பப் போட்டிகள் 10.08.2025 அன்று நடைபெற்றது. மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலம்பாட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்ற இந்தப் போட்டிகளில்,…
3.5 லட்சம் ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்
புதுடில்லி, ஆக.13- கடந்த 2003 முதல் 3.5 லட்சம் ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: ஓலைச்சுவடி…
செய்திச் சுருக்கம்
கடன் வட்டி தள்ளுபடி.. தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு வீட்டு வசதி வாரியத்தில் வீடுகளை வாங்கி தவணை கட்டத் தவறியவர்களுக்கான அபராத வட்டியை தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில், சிறப்பம்சமாக, வட்டி முதலாக்கத்தின் (interest on capitalization) மீது விதிக்கப்பட்டுள்ள…
கென்யாவில் காது கேளாதோருக்கான புதிய செயலி ஏ.அய். மூலம் அனைவரோடும் தொடர்புகொள்வதில் புதிய முயற்சி
நைரோபி, ஆக.13- கென்யாவில், காது கேளாதோர் மற்றவர் களுடன் எளிதாக உரையாட உதவும் வகையில், ஒரு புதிய செயலி ஏ அய் உதவியோடு அறிமுகப்படுத்த ப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ளூர் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட உலகின் முதல் சைகை மொழி மொழிபெயர்ப்பு செயலி இதுவாக…
சீனாவில் களைகட்டிய மனித இயந்திரக் குத்துச்சண்டை போட்டி பார்வையாளர்களை ஈர்த்த ‘ரோபோ’க்கள்
பீஜிங், ஆக.13- சீனாவில் நடைபெற்ற ‘2025 உலக ரோபோ மாநாட்டில்' (2025 World Robot Conference), மனித இயந்திரங்களுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் வளையத்தைச் சுற்றி நின்று சண்டையை ரசித்தனர்.…
மேனாள் தென்கொரிய அதிபரின் மனைவி கைது ஊழல் குற்றச்சாட்டில் தம்பதியர் சிறையில்!
சியோல், ஆக.13- தென் கொரியாவின் முன்னாள் முதல் பெண்மணியான கிம் கியோன் ஹீ, ஊழல் குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கெனவே அவரது கணவரும் மேனாள் அதிபருமான யூன் சுக் இயோல் சிறையில் இருக்கும் நிலையில், இந்த கைது நடவடிக்கை தென் கொரிய…
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்போம்! ஆஸ்திரேலியா பிரதமர் அறிவிப்பு
கான்பெர்ரா, ஆக.13- காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது, 2023 அக்டோபரில் மேற்காசிய நாடான இஸ்ரேல் தாக்குதலைத் துவங்கியது. போரை…
சீனப் பொருள்களுக்கான வரியை 90 நாள்களுக்கு ஒத்திவைத்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
வாசிங்டன், ஆக.13- அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், சீனப் பொருள்களுக்கு விதிக்கப்பட்ட வரியை 90 நாள்களுக்கு ஒத்தி வைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது குறித்து அவர் தனது Truth சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட் டுள்ளார். வரி ஒத்திவைப்பு முன்னதாக, அமெரிக்காவும்…
கழகக் களத்தில்…!
14.8.2025 வியாழக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநில மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம் பொன்னேரி: மாலை 6.00 மணி *இடம்: அறிஞர் அண்ணா சிலை முன்பு, பொன்னேரி *வரவேற்புரை: கெ.முருகன் (மீ.ஒன்றிய செயலாளர்) *தலைமை: வே.அருள் (நகர தலைவர்) *முன்னிலை: சு.இராசசேகர், …
ஈராக்கில் கடும் வெப்பத்தால் நாடு முழுவதும் மின்தடை
பாக்தாத், ஆக.13- ஈராக்கில் கடும் கோடை வெப்பம் காரணமாக மின்சாரத்துக்கான தேவை அதிகரித்ததால், நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த சில நாட்களாக ஈராக்கின் பல பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவாகி…
