சட்டப் பேரவையில் எம்.எல்.ஏக்கள் கண்ணியக் குறைவான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை! பேரவைத் தலைவர் எச்சரிக்கை!

1 Min Read

சென்னை, ஜூன் 23– ‘சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணியக்குறைவான செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் எச்சரித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் தற்போது நேரலை செய்யப்பட்டு வருகின்றன. இதையடுத்து அவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் நேற்று (22.6.2026) பேசியதாவது:

ஆதாரமற்ற குற்றச்சாட்டு

“சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் விவாதத்தில் பேசும்போது, நீதிமன்ற விசாரணையில் இருக்கும் விவரங்கள் மீது தங்கள் கருத்துகளை சொல்லக்கூடாது. அப்படி சொன்னதால், மதுரையைச் சேர்ந்த உறுப்பினரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

உறுப்பினர்கள் எவரையும் தனிப்பட்ட முறையில் முறையற்ற வார்த்தைகளால் தாக்கி பேசக்கூடாது. மேலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி பேரவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது. சட்டப்பேரவை நடவடிக்கைகள் சிறப்பாக அமைய, உறுப்பினர்கள் உரையாற்றும்போது சுருக்கமாகவும், தெளிவாகவும் பேச வேண்டும்.

உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் உள்ள முக்கியமான பிரச்சினைகள் குறித்து தங்கள் உரையில் பேசலாம். பேரவை நிகழ்வுகள் தற்போது நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுவதால், அவையில் உள்ள உறுப்பினர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். கடந்த 19.6.2026 அன்று அவையில் சில உறுப்பினர்கள், மற்றவரை கேலி செய்யும் விதமாக செய்த சைகைகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவுகின்றன.

நடவடிக்கை

இது சட்டப்பேரவையின் மாண்பையும், கண்ணியத்தையும் குறைக்கும் செயலாகும். எனவே, இத்தகைய கண்ணியக்குறைவான செயல்களில் இனிவரும் காலங்களில் ஈடுபடக்கூடாது. அதை மீறினால் அது பேரவையின் உரிமை மீறலாகக் கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அவர் பேசினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *