வாசிப்போம், யோசிப்போம்!
புத்தகம் என்பது சிந்தனையாளனின் சிறந்த ஆயுதம். யுகத்தின் விடியலுக்காக படைப்பாளன் கொட்டும் பேரிகை முழக்கம் அவன் படைக்கும் புத்தகமாகும். புத்தகங்களை மரங்களின் பரிணாம வளர்ச்சியாகக் காண்பது அறிவியல் பார்வை. ஓரிடத்தின் நூற்றாண்டு உறக்கத்தைக் கலைக்கும் கதிரவன் புத்தகமாக மட்டுமே இருக்க முடியும்.…
சமூக நீதி நாள் உறுதி மொழி!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும்- யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்! சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்! சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம்…
பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரிகளில் சமூக நீதி நாள் உறுதிமொழி தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவு!
சென்னை, செப் 16 தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் 'சமூக நீதி நாளாக' கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் செப்டம்பர் 17, 2026 (வியாழக்கிழமை) அன்று…
HBD PERIYAR
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி, நாளை முழுவதும் (17.9.2026) வாழ்த்துச் செய்திகள், பொன் மொழிகள், பாடல்கள், படங்கள், காணொலிகள் பகிரும் போது, கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் @Asiriyarkv என்னும் IDயை tag செய்து, #HBDPeriyar148 என்னும் ஹேஷ்டேக்குடன் பதிவு செய்யுங்கள்!…
அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
சென்னை, செப். 16- முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீதான வழக்குப்பதிவை அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை எனவும், சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் எனவும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்…
பேராசிரியர் டாக்டர் வேதகிரி சண்முகசுந்தரத்தின் 100 ஆவது பிறந்தநாள் (நூற்றாண்டு) விழா – தமிழர் தலைவர் பங்கேற்பு
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரியில் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் டாக்டர் வேதகிரி சண்முகசுந்தரத்தின் 100 ஆவது பிறந்தநாள் (நூற்றாண்டு) விழா நடைபெற்றது. நூற்றாண்டு மலர் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்…
பேரறிஞர் அண்ணாவின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி! அண்ணா வெறும் படம் அல்ல; என்றும் நமக்குப் பாடம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை பேரறிஞர் அண்ணாவின் 118 ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2026) ‘‘அண்ணா வெறும் படம் அல்ல; என்றும், நமக்குப் பாடம்’’ என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை…
தனி மனிதத் தாக்குதல்கள், உடல் மொழிகள் ஏற்கத்தக்கவை அல்ல! தமிழ்நாட்டுப் பண்பாட்டை அனைவரும் கடைப்பிடித்தொழுகுவது அவசியமாகும்!
பெண்கள்பற்றிப் பேசும்போது மிகுந்த கவனம் தேவை. இரட்டை அர்த்தங்கள், நையாண்டிகள் எதிர்விளைவு களையே உருவாக்கும். தமிழ்நாட்டுப் பண்பாட்டை அனைவரும் கடைப்பிடித்தொழுகுவது அவசியமாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:…
ஜாதி வாரிக் கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்படுத்தும் ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை!
இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதை வழக்கமாகக் கொண்டது ஆரியம்; ஆரியம் என்றாலும், ஆர்எஸ்எஸ் என்று சொன்னாலும் ஒன்றுதான்! பாதிக்கப்பட்டவர்களுக்குப் பரிகாரம் தேடக்கூடிய ஒரு திட்டம்தான் இட ஒதுக்கீடு! சென்னை, செப்.15 இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதை வழக்கமாகக் கொண்டது ஆரியம்; ஆரியம் என்று சொன்னாலும்…
தந்தை பெரியார் பிறந்த நாள்: ‘‘சமூக நீதி நாள் உறுதிமொழி!’’
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாளான செப்.17 இல் ஒவ்வொருவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி வருமாறு: ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற அன்பு நெறியும் - ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைபிடிப்பேன்!…
இந்நாள் அந்நாள்
தமிழறிஞர் மறைமலை அடிகளார் நினைவு நாள் இன்று (15.09.1950) தனித் தமிழ் இயக்கம் தொடங்கி தமிழ் வளர்ச்சிக்காக பணியாற்றிய தமிழ் அறிஞர் மறைமலை அடிகளார் ‘தனித்தமிழ்’ எனும் சொல்லுக்கு வித்திட்ட காரணத்தால் ‘தனித் தமிழ்த் தந்தை’ என அழைக்கப் பட்டவர்.…
நாம் யாருக்கு எதிரி?
பேரறிஞர் அண்ணா திராவிடர் கழகத்தாராகிய நாம் பார்ப்பனர்களுக்கு எதிராக வேலை செய்கிறோமென்றும், தமிழ் நாட்டிலுள்ள பார்ப்பனர்கள், திராவிடர் கழகத்தாருக்குப் பயந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதென்றும், திராவிடர் கழகத்தாரால் செய்யப்பட்டு வரும் ‘ஆபத்துகளை’ ஒழித்துப் பார்ப்பனர்களைக் காப்பாற்ற வேண்டுமென்றும் 1-3-1949இல் நடைபெற்ற…
