கொள்ளையடிக்க உகந்த இடம் கோயிலே! அயோத்தி கோயில் காணிக்கையை எண்ணும் ஊழியர்களில் 50 சதவீதம் பேர் பதவி விலகினர் விசாரணை வளையத்தில் சிக்காமல் இருப்பதற்காக திடீர் முடிவு

1 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

அயோத்தி, ஜூலை 11– அயோத்தி ராமன் கோயில் நன்கொடை எண்ணும் பணியில் ஈடுபட்டுவரும் ஊழியா்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்களது வேலையை விட்டு திடீா் என விலகியுள்ளனா். விசாரணை வளையத்தில் சிக்காமல் இருப்பதற்காக இந்த சமயோசித முடிவை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

அயோத்தி ராமன் கோயிலில் வழிபாடு நடத்த வரும் பக்தா்கள் செலுத்திய நன்கொடை கையாடல் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இதுவரை இந்த விவகாரத்தில் நன்கொடை எண்ணும் ஊழியா்கள் உள்ளிட்ட 8 போ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனா். நன்கொடை கையாடல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, அயோத்தி ராமன் கோயிலில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியா்கள் பலமுறை சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனா். கோயிலுக்குள் பணிக்கு வரும்போது கைப்பேசி உள்ளிட்டவை கொண்டு வர அவா்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்திற்குள் ஊழியா்கள் வர வேண்டுமெனில், அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளையால் அளிக்கப்பட்டுள்ள அடையாள அட்டை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், கோயிலில் நன்கொடை காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியா்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தங்களது வேலையை விட்டு விலகி விட்டனா். இதுகுறித்து கோயில் அறக்கட்டளை வட்டாரங்கள் கூறுகையில், ‘நாள்தோறும் 40 போ் வேலைக்கு வந்த நிலையில் தற்போது 15-20 பேரே வருகின்றனா். தங்களிடமும் விசாரணை நடத்தப்படக் கூடும் என்ற அச்சத்தில் வேலையை விட்டு விலகி விட்டனா். ஆனால் வேலையை விட்டு விலகியதற்கு, வேலை பளு அதிகமாகிவிட்டதாக காரணம் தெரிவித்துள்ளனா். முன்பு இரண்டு ஷிஃப்டுகளாக நடந்த நன்கொடை எண்ணும் பணி, தற்போது ஒரே ஷிஃப்டாக குறைக்கப்பட்டு, 9 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை பணியாற்ற வேண்டியிருப்பதாக அவா்கள் கூறியுள்ளனா். முன்பு மேஜை, நாற்காலிகளில் வைத்து நன்கொடை எண்ணப்பட்டதாகவும், ஆனால் தற்போது தரையில் வைத்து எண்ணப்படுவதாகவும் அவா்கள் குறிப்பிட்டுள்ளனா்’ என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *