30 நாட்களுக்கு எரிவாயு உருளை கையிருப்பு : ஒன்றிய அரசு உத்தரவு

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, மே 30 மேற்கு ஆசிய மோதல் காரணமாக எரிவாயு உருளை (எல்பிஜி கேஸ்) விநியோகத்தில் சில தடைகள் ஏற்பட்டு வருவதாக பரவலாக தகவல்கள் வருகின்றன. இந்த நிலையில் குறைந்த பட்சம் 30 நாட்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் எரிவாயு உருளைகள் சேமிப்புத் திறனை அதிகரிக்க வேண்டும் என அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களை ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகத்தின் இணை செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில், மேற்கு ஆசியா போரினால் இந்தியா உட்பட உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதித்தது.

எனவே குறைந்தபட்சம் 30 நாட் களுக்கான தேவையை பூர்த்தி செய்யும் வகையில் எரிவாயு சேமிப்பு (எல்பிஜி கேஸ்)திறனை அதிகரிப்பதற்கான திட்டங்களை தயாரிக்கும் படி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ப ரேஷன் லிமிடெட் நிறுவனங்களை அரசு கேட்டு கொண்டுள்ளது என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *