543 மக்களவை இடங்களில் ஏன் மகளிர் இட ஒதுக்கீட்டை அளிக்க முடியாது? – பிரியங்கா காந்தி கேள்வி

2 Min Read

புதுடில்லி, ஏப். 19- தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாக்கள் மீதான விவாதத்தில் மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி பேசியதாவது: சரியான நேரம் பார்த்து மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த முழு திட்டத்தையும் உருவாக்கியவர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா. சாணக்கியர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், உங்களின் அரசியல் தந்திரத்தை பார்த்து அதிர்ச்சியடைந்திருப்பார். இதைக் கேட்டு அமைச்சர் அமித் ஷா சிரிக்கிறார். நான் சொல்வது சரி என அவர் ஒப்புக் கொள்கிறார்.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மறு வரையறை ஆணையம் மூலம் மக்களவை இடங்களை 850-ஆக உயர்த்தப்படவுள்ளதாக இந்த மசோதா கூறுகிறது. மேலோட்டமாக பார்த்தால் இது நன்றாக இருப்பது போல் தெரிகிறது. ஆனால், இதை கவனமாக படித்துப் பார்த்தால் அதில் உள்ள அரசியல் தந்திரம் புரிகிறது. தற்போதுள்ள 543 மக்க ளவை இடங்களில் ஏன் மகளிர் இட ஒதுக்கீட்டை அளிக்க முடி யாது? தொகுதி மறுவரையறை செய்யாமலேயே, மகளிர் ஒதுக் கீடு மசோதாவை இன்று நிறைவேற்றி னாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

பிரதமர் உண்மையுடன் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கையை எடுத்திருந்தால், இந்த ஒட்டுமொத்த அவையும் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித் திருக்கும். இந்த மசோதாவை படித் துப் பார்க்கும்போது, 3 உறுப்பினர்கள் கொண்ட மறுவரையறை ஆணையம், மாநிலங்கள் மற்றும் அவற்றின் பிரதிநிதிகளை முடிவு செய்யும் எனத் தெரிகிறது. மக்களை ஏமாற்றவும், நாட்டின் ஒற்றுமை மீது மிகப் பெரிய தாக்குதல் நடத்தவும் ஒன்றிய அரசு மீண்டும் விரும்புகிறது.

சிறு மாநிலங்களின் செல் வாக்கை குறைப்பதன் மூலமும், ஜனநாயகத்தை துண்டு துண்டாக சிதறடிப்பதன் மூலமும், அடுத்த தேர்தலுக்கு மிகப் பெரிய கட்ட மைப்பு உருவாக்கப்படுகிறது. இவ் வாறு பிரியங்கா காந்தி கூறினார்.

பாஜக.வின் அரசியல் சாணக்கியர் அமித் ஷா என அனைவரும் கூறுவது வழக்கம். இந்நிலையில், “சாணக்கியர் உயிரோடு இருந்திருந்தால், உங்களின் தந்திரத்தை பார்த்து ஆச்சர்யம் அடைந்திருப்பார்” என பிரியங்கா காந்தி கூறியதும் மக்களவையில் இருந்த ஒன்றிய அமைச்சர் அமித் ஷா உட்பட அனைவரும் சிரித்தனர்.

இந்தியா

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையிடமான ரிப்பன் கட்டடத்தின் முன்புறம் “என் வாக்கு, என் உரிமை-தேர்தல் நாள்: 23.04.2026, நாம் அனைவரும் வாக்களிப்போம்” என்ற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய விளம்பரப் பதாகைகள் அமைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *