எம்.பி.பி.எஸ். படிப்பை முடிக்க 10 ஆண்டு கால அவகாசம் தேசிய மருத்துவ ஆணையம் பரிந்துரை

புதுடில்லி, ஜூன் 2 எம்பிபிஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டுகள் காலஅவகாசத்தை பரிந்துரைத்துள்ள தேசிய மருத்துவ ஆணையம்(என்எம்சி) இதற்காக மாணவர்கள், பொது மக்களிடமிருந்து கருத்துகள், ஆட்சேபனைகளை கேட்டுள்ளது.  அய்ந்தரை ஆண்டுகள் பயிலும் எம்பிபிஎஸ் படிப்பில் முதல் நான்கரை ஆண்டுகள் பாட வகுப்புகள், செயல்முறை வகுப்புகள் பயிற்றுவிக்கப்பட்டு, அதன் பின்னர், ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்றுவது கட்டாயமாக உள்ளது.

இது நிறைவுற்றதும் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து மருத்துவராக பணியாற்ற முடியும். அய்ந்தரை ஆண்டு கால படிப்பாக இருந்தாலும், தேர்ச்சி பெறாதவர்கள் 9 ஆண்டுகள் வரை தேர்வுகளை மீண்டும் எழுத அனுமதி அளிக்கப்படுகிறது. அதாவது, எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் ஒருவர் அதிகபட்சமாக ஒன்பது ஆண்டுகளுக்குள் எம்பிபிஎஸ் படிப்பின்கீழுள்ள அனைத்து தாள்களிலும் தேர்ச்சி பெறுவதுடன், ஓராண்டு மருத்துவ பயிற்சியையும் நிறைவு செய்வது அவசியம்.

அதேபோல், முதலாமாண்டு தேர்வுகளை அதிகபட்சமாக நான்கு முறை எழுத வாய்ப்பு தரப்படுகிறது. இந்நிலையில் எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்யும் காலஅவகாசத்தை 9 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டு களாக அதிகரிக்க தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்மொழிவை அரசிதழிலும் வௌியிட்டது. புதிய முன்மொழிவுகள் குறித்து 30 நாள்களுக்குள் ஆட்சேபனைகள், கருத்துகளை அனுப்புமாறு தேசிய மருத்துவ ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

 

சுங்கச்சாவடிகளில்
புதிய கட்டணம் அமல்

சென்னை, ஜூன் 2 தமிழ்நாடு முழுவதும் உள்ள 68 சுங்கச் சாவடிகளில் திருத்தப்பட்ட புதிய கட்டணங்கள் நேற்று (1.6.2026) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஆண்டுதோ றும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் சுங்கக் கட்டண உயர்வு நடை முறைப்படுத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக அது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

தேர்தல் நடைமுறைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து புதிய கட்டண விகிதங்கள் இப்போது அமலுக்கு வந்து உள்ளன. இந்த விகிதங்கள் அடுத்த ஆண்டு மார்ச் 31, 2027 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் ஒப்பந்த விதிமுறைகளின்படி, சுங்கக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் மற்றும் மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். இந்த கட்டண உயர்வு லாரி, பேருந்து மற்றும் பல அச்சு கொண்ட பெரிய சரக்கு வாகனங்களையும் பாதிக்கும். இதனால் மாதாந்திர பாஸ் விலை அதிகரிப்புடன் அத்தியா வசியப் பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு இருப்பதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *