சென்னைக்கு பெருமழை ஆபத்தா? எல் நினோ கணிப்பும் பின்னணியும்!

2 Min Read

சென்னை, ஜூலை 19  பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள ‘எல் நினோ’ காலநிலை சூழல், 2027ஆம் ஆண்டின் குளிர்காலம் வரை நீடிக்க அதிக வாய்ப்புள்ளதாக இந்திய தேசிய கடல் தகவல் சேவைகள் மய்யம் கணித்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் (2027) வரை இது நீடிப்பதற்கு 85 சதவீதம் முதல் 98 சதவீதம் வரை வாய்ப்புகள் உள்ளன.

இந்த எல் நினோ சூழலால் சென்னை மற்றும் தமிழ்நாடு வானிலை யில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்த முக்கியத் தகவல்கள்:

தென்மேற்கு பருவமழை குறைவு

தற்போது நிலவும் கடுமையான வெப்ப அலை மற்றும் புழுக்கத்திற்கு பலவீனமான தென்மேற்கு பருவ மழையே காரணம். அரபிக்கடலில் இருந்து வரும் ஈரப்பத காற்று குறைவ தால் வறண்ட சூழல் நிலவுகிறது.

வரலாற்று தரவுகளின்படி, எல் நினோ ஆண்டுகளில் சென்னையின் தென்மேற்கு பருவமழை (வழக்கமான சராசரி 44 செ.மீ) இயல்பை விடக் குறைவாகவே இருக்கும்.

வடகிழக்கு பருவமழையில் பெருமழைக்கு வாய்ப்பு தென்மேற்கு பருவமழையைக் குறைத்தாலும், சென்னைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வடகிழக்கு பருவமழைக்கு (அக்டோபர் – டிசம்பர்) எல் நினோ சாதகமாக அமையும்.

சென்னையின் ஆண்டு மழைத் தேவையில் 60 சதவீதம் வடகிழக்கு பருவமழை மூலமே நிறைவாகிறது தமிழ்நாட்டில் பெருமழை பெய்த 1997, 2015 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகள் மிக வலுவான எல் நினோ ஆண்டுகளேயாகும் என்று வானிலை பதிவர் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஒட்டுமொத்த மழைப் பொழிவு என்பது இந்திய பெருங்கடல் இருமுனைவு (IOD), மேடன்-ஜூலியன் அலைவு (MJO) மற்றும் வங்கக்கடல் புயல்களைப் பொறுத்தே அமையும்.

வெப்பமான குளிர்காலம் 

எல் நினோ தாக்கத்தால் இந்த ஆண்டு இந்தியாவில் வழக்கத்தை விட சற்றே வெப்பமான குளிர்காலம் நிலவக்கூடும். தற்காலிக நிவாரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில்  மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலை 37-38° செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸ் ஆகவும் பதிவாகலாம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *