‘‘பிரதமர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டும்” அபிஜித் தீப்கே

புதுடில்லி, ஜூலை 19 கல்வித்துறையில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித் தும், இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனவும் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் கல்வியாளர் சோனம் வாங்சுக் போராட்டத்தில் கலந்து கொண்டார். அவர் கடந்த ஜூன் 28 முதல் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் கடந்த 21 நாட்களாகத் தொடர்ந்து உண்ணாநிலை இருந்துவருவதால் உடல் நிலை மிகவும் மோசமடைந்து உள்ளது. இருப்பினும், அரசு தரப் பினர் போராட் டக்காரர்களைச் சந்தித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.
இதையடுத்து, ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் தொடங்க உள்ள நிலையில், அன்று நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்த இருப்பதாகக் கரப்பான் பூச்சி கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது. நாளை (20-07-26) நாடாளுமன்றம் கூட உள்ளது. அன்று, இவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதிப் பேரணி நடத்த இருந்தனர் . இந்நிலையில், போராட்டத்தில் இருந்த சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டிருந் தவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து, ஆளும் தரப்பினர் சர்வாதிகாரமாக நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டிய கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, தான் காலவரையற்ற உண்ணாநிலையில் இருக்கப் போவதாக அறிவித்தார் . மேலும், தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றும் அதற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் பொது மக்கள் ஆதரவு தர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். அப்போது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் அவர் மீது மை வீசினார்.
தொடர்ந்து பேசிய தீப்கே, ‘‘தர்மேந் திர பிரதானை பதவியில் இருந்து அகற்றச் சொன்னால். அதிகாரத்தில் இருப்பவர்கள் சோனம் வாங் சுக்கை போராட்ட களத்தில் இருந்து அகற்றுகிறார்கள். இது ஜனநாயகத்திற்கு எதிரானது. இது ஆளும் கட்சியின் சர்வாதிகாரப் போக்கைக் காட்டுகிறது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது. அத னால், பிரதமர் நரேந்திர மோடியைப் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கையை முன் வைக்கிறோம்.’’ என்றார்,
இதனிடையே, சோனம் வாங்சுக் மருத்துவமனையிலும் உண்ணாநிலை மேற்கொண்டு வருவதாக அவரது மனைவி கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *