மகாராட்டிராவில் பி.ஏ., சிவில் சர்வீசஸ் தேர்வின் போது மாணவர்கள் கைப்பேசி பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள், மாணவர்களிடம் ரூ.300 வாங்கிக்கொண்டு தேர்வு அறைக்குள் கைப்பேசிகளை அனுமதித்ததாக கூறப்படுகிறது. இந்த காணொலி இணையத்தில் வைரலானதால், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும், துறை ரீதியாக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலிறுத்துகின்றனர்.

