தருமபுரி ஒகேனக்கலில்… 9 ஆம் ஆண்டாக 72 இருபால் மாணவர்களுடன் தொடங்கியது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை!

2 Min Read

ஒகேனக்கல். ஏப். 25- தந்தை பெரியார் கொள்கைகளை தொடர்ந்து மக்களிடையே கொண்டு செல்லும் ஒரு பரப்புரை உத்தியாக பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தமிழ்நாட்டில் வெவ்வேறு இடங்களில் நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தருமபுரி, அரூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தொடங்கிய இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையின் முதல் வகுப்பை, கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், ”பெரியார் ஒர் அறிமுகம்” எனும் தலைப்பில் நடத்தினார்.

ஒகேனக்கலில் 9 ஆம் ஆண்டாக பெரியாரியல் பயிற்சிப்பட்டறை தருமபுரி ஒகேனக்கலில் உள்ள தந்தை பெரியார் மன்றத்தில் 25.04.2026, 26.04.2026 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாளில் முதல் வகுப்பை கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள், “பெரியார் ஒர் அறிமுகம்” எனும் தலைப்பில் நடத்தினார். குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் இருபால் மாணவர்கள் 72 மற்றும் பார்வை யாளர் 30 பேர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், தருமபுரி மாவட்டத் தலைவர் தமிழ்பிரபாகரன் தலைமையில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கதிர்.செந்தில் அனைவரையும் வரவேற்றார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் முன்னிலை ஏற்று பயிற்சி வகுப்பை ஒருங்கிணைத்து சிறப்பித்தார். மாநில ஒருங்கிணைப்பாளரும், பயிற்சிப்பட்டறை ஒருங்கிணைப்பாளருமான தஞ்சை இரா.ஜெயக்குமார் பயிற்சி வகுப்பில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறை களைக் கற்றுக்கொடுத்து உரையாற்றினார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு கரோனா பெருந்தொற்றுக் காரணமாக 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் பயிற்சிப் பட்டறை நடைபெறவில்லை. அதன்பிறகு பல்வேறு தொடர் பணி களால் நடைபெறாமல் இருந்த இந்த பயிற்சிப்பட்டறை, திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உத்தரவின் பெயரில் 9 ஆம் ஆண்டாக சிறப்பாகத் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் வகுப்பை, கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், ”தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்” எனும் தலைப்பில் நடத்தினார். மகளிரணி மாநிலச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி கேள்விகள் கேட்டு மாணவர்களை பதிலளிக்கச் செய்தார்.

இந்நிகழ்வில், அரூர் மாவட்டத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், அரூர் மாவட்டச் செயலாளர் தங்கராசு, கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் திராவிட மணி, தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அமைப்பாளர் அன்பரசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செல்லதுரை, மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், ஊடகத்துறை மாநிலச் செயலாளர் மா.அழகிரிசாமி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு, இளைஞரணி மாநிலச் செயலாளர் நாத்திகப் பொன்முடி, பெரியார் மருத்துவக் குழுமத் தலைவர் மருத்துவர் இரா.கவுதமன், சேலம் மாவட்டத் தலைவர்  வீரமணி ராஜூ, ஆகியோர் தொடக்க நிகழ்ச்சியில் முன்னிலை வகித்து சிறப்பித் தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *