மதுரை அனா… ஆவன்னாவிடம் நலம் விசாரிப்பு

1 Min Read
- Advertisement -

மதுரை, நவ. 15– மதுரை மாநகர் வில்லாபுரம் பகுதி கிளைக் கழகத் தலைவரும், பெரியார் பால்பண்ணை உரிமையாளரும், பெரியார் பெருந்தொண்டருமான அ.ஆறுமுகம் தோள் பட்டை எலும்பில் ஏற் பட்ட வலி காரணமாக ஆறு மாதங்களுக்கு மேல் மிகவும் துன்பப்பட்டு வந்த நிலையில் மதுரை எலும்புமுறிவு மருத்து வர்கள் அறிவுரைப்படி கோவை கங்கா மருத்துவ மனையில் 25-10-2026 அன்று அனுமதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சைக்குப் பின் மதுரை வில்லாபுரத் தில் உள்ள இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்.

தகவல் அறிந்த தலைமை செயற்குழு உறுப்பினர் வே.செல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர் எ.செல்வப் பெரியார், மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், மாவட்டச் செயலாளர் இராலீ.சுரேஷ், பெரியார் பெருந்தொண்டர் பெரி.காளியப்பன் ஆகியோர் சென்று அய்யா அவர் களின் நலம் குறித்து கேட்டறிந்தனர். ஆறுமுகம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் நகைச்சுவை உணர்வோடு பேசி அவ ரின் அன்பைப் பெற்றவர்.

கடந்த 50ஆண்டுக ளுக்கு மேலாக அவரு டைய பெரியார் பால் பண்ணைக்கு வரும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் வரை அனை வரிடமும் பெரியார் கருத்துகளையும், அவரின் அறிவுரைகளையும், மற் றும் பெரியார் எழுப்பிய கேள்விகளையும் நகைச் சுவை உணர்வோடு எடுத்துச் சொல்லி மக்களை ஈர்க்கும் ஒரு திண்ணைப் பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து வருபவர். இல்லத்திற்கு வருபவர்களுக்கு சத்தான பாதம், பிஸ்தா, பேரிசை போன்ற பழங்களையும் வழங்கி உண்ண வைத்து மகிழ்ச்சியடைய வைக்கும் பண்பாளர், அப்படிப்பட்ட தொண்டறத் தோழர் முழு உடல் நலம் பெற்று திண்ணைப் பிரச்சார பணி தொடர மதுரைப் பொறுப்பாளர்கள் அன்புடன் விசாரித்து மகிழ்வுடன் திரும்பினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *