118 ஆண்டை நிறைவு செய்த எழும்பூர் ரயில் நிலையம்!

சென்னை, ஜூன் 14- எழும்பூர் ரயில் நிலையம் தொடங்கி 118 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

சென்னையின் பழைமையான ரயில் நிலையங்களில் எழும்பூர் ரயில் நிலையமும் ஒன்று. கடந்த 1908-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த ரயில் நிலையக் கட்டடம் இந்தோ-சராசனிக் கட்டடக் கலை வடிவத்தில் அமைந்துள்ளது.

நிலையத்தின் முன்பகுதி இரு மாடிக் கட்டடமாக 500 அடி நீளமும், 71 அடி அகலமும் உடையதாக உள்ளது. இந்த நிலையத்திலிருந்து முதல்முறையாக போட் மெயில் ரயில் இயக்கப்பட்டுள்ளது.

தற்போது எழும்பூர் ரயில் நிலையமானது ரூ.842 கோடியில் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, புதிய நுழைவு வாயில், புதிய நடைமேம்பாலம் என விமானநிலையத்துக்குரிய உட்கட்டமைப்புகளுடன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மிக நவீன வாகன நிறுத்தும் வளாகமும் அண்மையில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

எழும்பூர் ரயில் நிலையம் தனது 118-ஆவது ஆண்டு சேவையை நிறைவு செய்ததையடுத்து ரயில் நிலைய அதிகாரிகள் 11.6.2026 அன்று கேக் வெட்டி அதை பயணிகளுக்கு வழங்கிக் கொண்டாடினர்.

நாட்டின் பாரம்பரிய ரயில் நிலைய அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் எழும்பூர் ரயில் நிலையத்தை, அதன் முன்பகுதி கட்டட சிறப்பை உரிய முறையில் பாதுகாத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *