புதுடில்லி, நவ. 13- உள்நாட்டில் மறுசுழற்சி மற்றும் முக்கிய கனிமங்களை மீட்டெடுப்பதை வலுப்படுத்தும் நோக்கில், லித்தியம்-அயன் பேட்டரி பிளாக் மாஸ் (Black Mass) ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது.
பிளாக் மாஸ் என்பது, பயன்பாட்டுக்கு உகாத லித்தியம்-அயன் பேட்டரிகள் மற்றும் பேட்டரி உற்பத்தி கழிவுகள் மூலம் பெறப்படும் தூள் போன்ற பொருளாகும். இதில் லித்தியம், கோபால்ட், நிக்கல் மற்றும் மாங்கனீசு உள்ளிட்ட முக்கிய கனிமங்கள், மீட்டெடுக்கக்கூடிய அளவில் உள்ளன.
இந்தியாவில் உருவாகும் கழிவுப் பொருட்களின் ஏற்றுமதி இந்த மதிப்புமிக்க வளத்தை வெளிநாடு களுக்குத் திருப்பி விடுகிறது. அதே சமயம், உள்நாட்டு மறுசுழற்சியாளர்கள் சில சமயங்களில் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.
இந்தியாவில் உருவாகும் கழிவுப் பொருட்கள் நாட்டி லேயே மறுசுழற்சி செய்யப்பட்டு சுத்திகரிக்கப்படுவதை உறுதி செய்வதே இந்த ஏற்றுமதித் தடையின் முக்கிய நோக்கமாகும்.
இந்த நடவடிக்கை, உள்நாட்டு மறுசுழற்சி மற்றும் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு மூலப்பொருட்கள் கிடைப் பதை உறுதி செய்யும், அவற்றின் திறன் பயன்பாட்டை மேம்படுத்தும், மேலும் இத்துறையில் கூடுதல் முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும்.
பீகாரில் மாபியா ஆட்சி நடைபெறுவதாக தேஜஸ்வி குற்றச்சாட்டு!

பாட்னா, நவ. 13- பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான ஆட்சியில் ஊழல் மற்றும் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு அதிகரித்துள்ளதாகவும், மாநிலத்தில் அனைத்து நிலைகளிலும் ‘மாபியா ஆட்சி’ நடைபெறுவதாகவும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தேசிய செயல் தலைவர் தேஜஸ்வி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ்சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“பீகாரில் என்.டி.ஏ தலைமையிலான தற்போதைய ஆட்சியில் ஊழல், சீரழிந்து வரும் சட்டம் – ஒழுங்கு மற்றும் மோசமான நிர்வாகம் ஆகியவை ஆழமாக வேரூன்றிய கட்டமைப்புச் சிக்கல்களாக மாறியுள்ளன. இவை சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும், அனைத்து நிறுவனங்களையும் கடுமையாகப் பாதித்துள்ளன.
மாநிலத்தில் அனைத்து நிலைகளிலும் மாபியா ஆட்சிதான் நடக்கிறது. குற்றவாளிகள் காவல்துறை யினரைக் கொல்வதும், அதே சமயம் காவல்துறையினர் தங்கள் தவறுகளை மறைப்பதற்காக அப்பாவி குடிமக்களைக் கொல்வதும் மிகவும் கெடுவாய்ப்பானது.
துணை முதலமைச்சரின் நிர்வாகத் திறமையின்மை, அனுபவமின்மை மற்றும் பலவீனமான தலைமை ஆகியவற்றால் காவல்துறையும், அதிகார வர்க்கமும் எவருக்கும் பொறுப்புக்கூற வேண்டிய அவசியமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன” என்று தேஜஸ்வி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மயிலாடுதுறை அருகே
குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்ததாக மக்கள் புகார்!
மயிலாடுதுறை, நவ. 13- மயிலாடுதுறை அருகே உள்ள வில்லியநல்லூர் ஊராட்சி பன்னீர்வேலி கிராமத்தில் காளியம்மன் கோயில் எதிரில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது. 1995இல் அமைக்கப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து, அப்பகுதியில் உள்ள சுமார் 200 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைப்பேசியில் டவர் கிடைக்காததால் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி ஏணியின் மீது ஏறியுள்ளார். அப்போது துர்நாற்றம் வீசவே, தொட்டியின் மேல் பகுதிக்குச் சென்று பார்த்துள்ளார். குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று (12.11.2026) அந்த தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்வது நிறுத்தப்பட்டது. மனிதக்கழிவு கலந்த குடிநீரை ஆய்வுக்காக எடுத்து அனுப்ப உள்ளோம். பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஊர் மக்கள் கூறும்போது, “பல ஆண்டு களாக குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யவில்லை. தொட்டியின் மேல்புற கான்கிரீட் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இந்தத் தொட்டியை அகற்றிவிட்டு, புதிய தொட்டி கட்டுவதுடன், தொட்டியில் மனிதக் கழிவு கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா அளித்துள்ள விளக்கத்தில், ‘நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்படவில்லை. மேல்புறத்தில் உள்ள கான்கிரீட் தளத்தில்தான் மனிதக் கழிவு காணப்பட்டது. தீபாவளி அன்று இரவு அப்பகுதியில் வசிக்கும் ஒரு சிறுவன் அவசரத்தில் குடிநீர் தொட்டியின்மேல் இயற்கை உபாதையை கழித்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் அச்சிறுவனுக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது என கூறியுள்ளார்.
