புதுடில்லி, ஆக. 31–– மாறிவரும் உணவுக் கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் காரண மாக, குழந்தைகளிடையே உடல் பருமன் பிரச்சினை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தடுத்து நுகர்வோரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பாக்கெட் உணவுகளின் முன்பக்கத்தில் “சிவப்பு நிற அறுகோண எச்சரிக்கை லேபிள்” ஒட்டுவதை கட்டாயமாக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) முன்மொழிந்துள்ளது.
குழந்தைகளிடையே அதிக ரித்து வரும் உடல் பருமன் குறித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் ஆழ்ந்த கவலை தெரிவித்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே FSSAI இந்த அதிரடித் திட்டத்தை வடிவமைத்து நடைமுறைப்படுத்த ஆலோசித்து வருகிறது.
சிவப்பு அறுகோணக் குறியீடு: பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளில் அதிகளவு சர்க்கரை, உப்பு அல்லது செறிவூட்டப்பட்ட கொழுப்பு இருந்தால், அந்த உணவின் முன்பக்கத்திலேயே தெளிவாகத் தெரியும் வகையில் சிவப்பு நிற அறுகோண லேபிள் அச்சிடப்பட வேண்டும்.
பெரிய எழுத்துகளில் எச்சரிக்கை: “அதிக சர்க்கரை” “அதிக உப்பு” அல்லது “அதிக கொழுப்பு” ஆகிய எச்சரிக்கை வார்த்தைகள் நுகர்வோர் எளிதில் படிக்கும் வகையில் பெரிய எழுத்துகளில் இடம்பெறும். விழிப்புணர்வு இலக்கு: பெற்றோர்களும் குழந்தைகளும் ஆரோக்கியமற்ற உணவுகளை வாங்குவதைத் தவிர்க்கவும், பாக்கெட் உணவுகளின் தீமை களை உணர்ந்து விழிப்புணர்வு பெறவும் இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் விரைவில் முழுமையாக நடைமுறைக்கு வரும் போது, குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கி யத்தைப் பாதுகாப்பதில் இதுவொரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
