டோக்கியோ, அக்.21- மனிதன் இதுவரை காலடி எடுத்து வைக்காத செவ்வாய் கோளின் ‘போபோஸ்’ மற்றும் ‘டீமோஸ்’ ஆகிய நிலவுகள் பற்றி ஆராய உலக நாடுகள் நீண்டகாலமாக முயன்று வருகின்றன. இந்த நிலையில், செவ்வாய் கோளின் நிலவான போபோஸில் தரை இறங்கி, அங்கிருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் விண்கலத்தை ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் 20.10.2026 அன்று ‘தனேகாக்ஷிமா’ ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
சுமார் ரூ.4 ஆயிரத்து 800 கோடி மதிப்பில், அமெரிக்காவின் நாசா மற்றும் அய்ரோப்பிய நாடுகளின் கூட்டு முயற்சியுடன் இந்த ‘எம்.எம்.எக்ஸ்’ விண்கலம் ஏவப்பட்டுள்ளது. இதில் ‘இடெபிக்ஸ்’ என்ற மைக்ரோவேவ் அடுப்பு அளவிலான சிறிய ரோவர் வாகனமும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விண்கலம் அடுத்த ஆண்டு இறுதியில் செவ்வாயை சென்றடைந்து, 2028-இல் நிலவில் இறங்கி மாதிரிகளைச் சேகரிக்கும்.
இத்திட்டம் வெற்றி பெற்றால், செவ்வாயின் நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்து வரும் முதல் நாடாக ஜப்பான் உருவெடுக்கும். அந்த அபூர்வ மாதிரிகள் 2031-ஆம் ஆண்டு பூமிக்கு வந்து சேரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
