புதுடில்லி, ஆக. 12– கடந்த 4ஆம் தேதி 137 பயணிகள் மற்றும் 8 ஊழியர்களுடன் டில்லி நோக்கி வந்த ஏர் இந்தியாவின் ஏஅய்2379 (AI2379) விமானம், ஒடிசா வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென நடுவானில் 300 அடி கீழே இறங்கி கடும் குலுக்கலுக்கு உள்ளானது.
இந்த எதிர்பாராத குலுக்க லால் விமானத்தில் பயணித்த 20 பயணிகள் மற்றும் 4 ஊழி யர்கள் என மொத்தம் 24 பேர் காயமடைந்தனர். விமானம் டில்லியில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் தகவல்
விமானப் போக்குவரத்து விதி களின்படி, தரையிறங்கியவுடன் விமானிகளுக்கு உடனடியாகப் போதைப்பொருள் பரிசோதனை செய்யப்பட்டது. தலைமை விமானிக்கு நடத்தப்பட்ட முதல் கட்ட சோதனையிலேயே சந்தேகம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவரது மாதிரிகள் விரிவான ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
இறுதி ஆய்வக அறிக்கையில், தலைமை விமானி கஞ்சா பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் விமானப் போக்குவரத்து நிறுவனத்திடமிருந்தோ அல்லது அதிகாரிகளிடமிருந்தோ வெளியாகவில்லை. விமானி களின் இத்தகைய பொறுப்பற்ற செயலால் பயணிகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
