மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் தீபாவளியின்போது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி இரவன்று வீட்டில் வெடிக்கப்பட்ட பட்டாசில் இருந்து எதிர்பாராதவிதமாக தீப்பொறி சிதறி, வீட்டில் குவித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளின் மீது பட்டது. வாசலுக்கு அருகில் வெடிப்பதற்காக வாங்கி வைத்திருந்த பட்டாசு தீப்பற்றியதால், யாருமே வெளியில் செல்ல முடியாமல் போனது
கண்ணிமைக்கும் நேரத்தில் தீ வேகமாகப் பரவியதால், வீட்டிற்குள் இருந்தவர்களால் வெளியேற முடியாமல் போனது. இதில், புகையினால் மூச்சுத்திணறியும், தீயில் கருகியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தக் கொடூர விபத்தில் குடும்பத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்ததால், அவர்களின் உடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தக்கூட சொந்த பந்தங்கள் யாரும் இல்லாத அவலநிலை ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு திரண்ட அண்டை வீட்டாரும், அப்பகுதி பொதுமக்களும், உயிரிழந்தவர்களின் உடல்களுக்குக் கண்ணீர் மல்க இறுதி மரியாதை செலுத்தி, இறுதி நிகழ்வுகளை நடத்தினர்.
இந்நிகழ்வு குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தீயில் கருகி உயிரிழந்த நிகழ்வு, மத்தியப் பிரதேசத்தில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
நரகாசுரனை மகாவிஷ்ணுவின் அவதாரமான கிருஷ்ணனும், மனைவி சத்யபாமாவும் சேர்ந்து போரிட்டு (அவ்வளவு வீராதி வீரர்கள்!) நரகாசுரனை வதம் செய்ததாக அதாவது கொன்றதாகக் கதை!
அவன் பெயர் சொல்லி கொண்டாடும் பக்தர்களும் வீண் வம்பை விலைக்கு வாங்குவதுபோல் பட்டாசு என்று சொல்லி, தங்களுக்குத் தாங்கள் தற்கொலை செய்து தொலைகிறார்களே, என்ன சொல்ல!
