புதுடில்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

நாட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது!

புதுடில்லி, ஜூலை 28 நாட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது! நாடாளுமன்ற வீதியில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் மீது
கொலை வெறித் தாக்குதல்!

நீட் முறைகேட்டுக்கு எதிராக ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற மாணவர்கள் – இளைஞர்கள் மீது காவல்துறை (டில்லி), மத்திய ஆயுதக் காவல் படை கொலை வெறித் தாக்குதல் நடத்தின. ஒட்டுமொத்த உலகையே உலுக்கிய இந்தத் தாக்குதலில் மாணவர்கள் பலர் படுகாயமடைந்தனர்.

பொதுநல வழக்கு!

இந்நிலையில், டில்லியில் போராடிய மாணவர்கள் மீது வரம்பு மீறி தாக்குதல் நடத்தியதை எதிர்த்து மூத்த வழக்குரைஞர் நரேந்திர மிஸ்ரா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு நேற்று (27.7.2026) விசாரணைக்கு வந்தது. மனுவில், “போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்திய டில்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படை வீரர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

கடும் கண்டனம் தெரிவித்த
தலைமை நீதிபதி!

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வு (நீதிபதி ஜோய்மால்யா பாக்சி, வி.மோகனா) அடங்கிய அமர்வு,‘‘நாட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமைக்கு முழுமையாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அதை யாராலும் மறுக்க முடியாது. போராட்டம் நடைபெறுகிறது என்பதை ஒரு காரணமாகக் கூறி, காவல்துறை தனது வரம்பு மீறல்களை நியாயப்படுத்த முடியாது” என தலைமை நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதற்கிடையே, காவல்துறையினரும் தாக்கப்பட்டு உள்ளதாக ஒரு வழக்குரைஞர் (காவல்துறை குடும்பத்தி னர் சார்பில்) வாதிட்டபோது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி,‘‘எந்தப் பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தா லும் ஒவ்வொரு தனிநபரின் உயிரும் முக்கியமானது தான். முறையான நெறிமுறை நடைமுறையில் இருக்க வேண்டும்.

போராட்டத்திற்கு சரியான இடவசதி இருக்க வேண்டும். தடைகள் இருக்கக்கூடாது. ஆனால், சமூக விரோத சக்திகள் போன்ற ஏதாவது இருந்தால் அதைக் கவனித்துக் கொள்ளலாம். இது டில்லி பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சினை. முக்கிய மாக மனச்சாட்சி சார்ந்த சுய ஒழுக்கம் தேவை, இது ஜனநாயக முறைக்கு அவசியமானது.

இந்த விவகாரத்தில் தங்களுக்கு அனைத்துத் தரப்பினரும் உதவ வேண்டும். போராட்டத்தின் போது தாக்கப்பட்டதாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களின் தனி மனுவையும் பட்டியலிடப்பட்ட பிற மனுக்களுடன் சேர்த்து இன்று (28.7.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *