புதுடில்லி, அக.21 இந்திய நாட்டின் பிரதமர் இல்லம் டில்லி, 7 கல்யாண் மார்க், ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ளது. இந்த இல் லத்தில்தான் பிரதமர் மோடி தங்கியுள்ளார். இதே ரேஸ் கோர்ஸ் பகுதியில் 60 ஆண்டுகள் பழைமையான மசூதி ஒன்றும் உள்ளது.இந்நிலையில், புதுடில்லி மாநகராட்சி இணையதளத்தில் பாரம்பரியச் சொத்துகளின் பட்டியலில் இடம் பெற்று வந்த ரேஸ் கோர்ஸ் மசூதியின் பெயர் அண்மையில் நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மசூதி அரசு நிலத்தில் இருப்பதாகக் கூறி, 7.10.2026 அன்று மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்புகளைத் துண்டித்ததுடன், ரேஸ் கோர்ஸ் மசூதியை இடிக்கத் டில்லி நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மசூதியின் இமாம் முகமது ஹரூன் கூறுகையில், ‘‘கடந்த 6 மாதங்களாகத் டில்லி வக்பு வாரியத்திடம் இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து எழுப்பி வருகிறேன். 8.10.2026 தேதி குடிநீர் மற்றும் மின் இணைப்புத் துண்டிப்பு குறித்து டில்லி மாநகராட்சிக்குக் கடிதம் எழுதியதைத் தவிர, இந்த விவகாரத்தைத் தீர்க்க வக்பு வாரியம் எந்தவிதமான பயனுள்ள நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
குடிநீர் இல்லை. மசூ திக்கு வருவதற்கான வழி தடைபட்டுள்ள தால், வேறு எங்கும் தண்ணீர் எடுக்க முடியவில்லை. இதனால் மசூதிக்கு வந்து செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்திற்குச் செல்லுமாறு நான் வக்பு வாரியத்திடம் கூறி னேன். வக்பு வாரியம் நீதிமன்றத் திற்கும் செல்லவில்லை. நானே நீதிமன்றத்திற்குச் செல்ல அனுமதி கேட்டேன். ஆனால், வருந் தத்தக்க வகையில் அதற்கும் அனுமதி அளிக்க வில்லை” என அவர் கூறினார்.
பா.ஜ.க.விற்கு ஆதரவாக
வக்பு வாரியம்
‘‘ரேஸ் கோர்ஸ் மசூதி 1977ஆம் ஆண்டு அரசிதழில் டில்லி மாநக ராட்சியின் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அதேசமயம், சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தால் பராமரிக்கப் படும் திருத்தப்பட்ட பட்டியலிலும் இம்மசூதி உள்ளது. மேலும், 2021ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக் கெடுப்பில் ரேஸ் கோர்ஸ் மசூதி அனுமதியற்றது என்றோ அல்லது அத்துமீறப்பட்ட இடத்தில் உள்ளது என்றோ அடையாளம் காணப்படவில்லை.
ஆனால், திடீரென்று அரசு நிலத்தில் இருப்பதாகக் கூறிப் பிரதமர் மோடியின் இல்லம் அருகே உள்ள மசூதியை இடிக்க தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் வக்பு வாரியமும் அமைதியாக உள்ளதால், மசூதி மற்றும் தர்காக்களை இடிக்கும் வேலையை முதன்மைப்பணியாகச் செய்து வரும் ஆர்எஸ்எஸ் – பாஜக விற்கு ஆதரவாக வக்பு வாரியம் செயல் பட்டு வருகிறதோ என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது’’ என்று கூறுகின்றது.
