புதுடில்லி, ஆக 10- இந்தியாவில் மதவெறித் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருவ தாகவும், கடந்த 7 மாதங்களில் 44 முஸ்லிம்கள் படு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ஆசிய நீதி இயக்கம் அதிர்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
11 வயது சிறுமி பலி
தெற்கு ஆசிய நீதி இயக்கத்தின்(South Asia Justice Campaign) ‘இந்தியா துன்புறுத்தல் கண்காணிப்பகம்’ (India Persecution Tracker) என்ற பெயரிலான அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்கள் பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன.
“2026 ஆம் ஆண்டின் மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் இந்தியாவில் குறைந்தது 25 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் 15 பேர் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினராலும், 10 பேர் மத ரீதியான தாக்குதல்களில் இந்துத்துவா குண்டர்களாலும் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் 11 வயது சிறுமியும், 16 வயது சிறுவனும் அடங்குவர்.இந்த 3 மாதத் தரவுகள் மூலம், இந்தியாவில் 2026 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 19 மரணங்கள் அரசுத் தரப்பினராலும், 25 மரணங்கள் இந்துத்துவா குண்டர்களாலும் நிகழ்த்தப்பட்டவை ஆகும். இதனால் 2026 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு ணர்ச்சிக் கொலைகளுக்கு மிகவும் ஆபத் தான ஆண்டாக மாறலாம்.முன்னெப்போதும் இல்லாத வகையில் காவல் மரணம், என்கவுண்டர் கொலைகள், பெருமளவிலான கைதுகள், வீடு இடிப்புகள் மற்றும் வங்கதேசத்திற்கு வெளி யேற்றுதல் உள்ளிட்டகட்டாய நடவடிக்கைகள் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வருகின்றன” என அந்த அறிக்கை விவரிக்கிறது.
3,000 கட்டடங்கள் இடிப்பு
8 மாநிலங்களில் குறைந்தது 21 சம்பவங்களில் 1,000–க்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் வீடுகள், வணிக வளாகங்கள்மற்றும் மத வழி பாட்டுக் கட்டடங்கள் (மசூதி, தர்கா) இடிக்கப்பட்டு உள்ளன. கடந்த ஒன்றரை மாதங்களில் மட்டும் 23 முஸ்லிம்களின் மதக் கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டில் இதுவரைஇடிக்கப்பட்ட முஸ்லிம் கட்டடங்களின் மொத்தஎண்ணிக்கை 3,000 அய்த் தாண்டியுள்ளது.
பதற்றமான பகுதியாக
மேற்கு வங்கம்
மேற்கு வங்கம்
மேற்குவங்கத்தில் பாஜக முதல்முறையாக ஆட்சி அமைத்ததிலிருந்து, அம்மாநிலம் ஒரு முக்கியப் பதற்றப் பகுதியாக உருவெடுத்துள்ளது. அங்கு மசூதிகள், முஸ்லிம்களுக்குச் சொந்தமான வணிக நிறு வனங்கள் மற்றும்வியாபாரிகளின் குடியிருப்புகள் மீதான தாக்கு தல்களில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் குடியுரிமைச் சரிபார்ப்பு, இடஒதுக்கீட்டுக் கொள்கைகளில் மாற்றங்கள், சிறுபான்மையினர் மற்றும் மத ரசாக்களுக்கான நிதிக் குறைப்பு, மதரசாக்கள் மீதான கண்காணிப்பு மற்றும் மாட்டுஇறைச்சிக்கான தடைகள் போன்ற நடவடிக்கைகள் மிக மோசமான அளவில் உள்ளன என அறிக்கைகுறிப்பிடுகிறது.
அதேபோல, அசாமில் பொதுமக்களை வங்கதேசத்தை நோக்கித் தள்ளும் நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன.
ஜூலை மாதத்தில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு – காஷ்மீரில் 2,500–க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர்; மேலும் 2 குடும்பங்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.
“இந்தியாவில் சட்டங்கள், நீதிமன்றத் தீர்ப்பு கள் மற்றும் அரசியல் பேச்சுக்கள் ஆகியவை முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டை ஆழப்படுத்தியுள்ளன.
மேலும் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் குறித்து அய்.நா. நிபுணர்கள் விடுத்துவரும் எச்சரிக்கைகளையும் நாங்கள் இந்த அறிக்கை மூலம் வெளிப்படுத்துகிறோம்” என அதில் கூறப்பட்டுள்ளது.
