த.வெ.க.வில் போதைப்பொருள் வலைப்பின்னலின் அட்டூழியம் அதிகமாகிறது: உதயநிதி ஸ்டாலின்

1 Min Read
- Advertisement -

சென்னை, அக்.20- த.வெ.க.வில் போதைப்பொருள் நெட்வொர்க்கின் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே போகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்ப தாவது:

வரலாற்றில் இல்லாத அளவுக்கு 135 கிலோ மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்ததாக நாகை த.வெ.க. நிர்வாகி பூபாலன் கைதான நிலையில், அது தொடர்பாக செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் த.வெ.க.-வின் நாகை நகரச் செயலாளர் பால்ராஜ்.

த.வெ.க.-விலிருந்து பூபாலன் நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், கட்சிப்பொறுப்பில் உள்ள இன்னொரு நிர்வாகி, போதைப் பொருள் கடத்திய நபருக்கு வக்காலத்து வாங்குவதும், பத்திரிகை யாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும் ஏன்?

கட்சியா இல்லை ‘நர்கோஸ்’ கூடாரமா என்று கேட்கும் அளவுக்கு த.வெ.க.வில் போதைப்பொருள் நெட் வொர்க்கின் அட்டூழியம் அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்த முதலமைச்சரின் ஆட்சியில் அவரது கட்சியிலேயே ‘டிரக் லார்ட்ஸ்’ மற்றும் ‘கார்டெல் மாஃபியா’ சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள்.

ரீல்ஸ் எடுப்பதிலேயே காலத்தைக் கழிக்காமல் கொஞ்சம் ‘ரியாலிட்டி’க்கு வந்து போதைப் பொருள் நடமாட்டத்தையும் – அதைக் கடத்தும் த.வெ.க.வினரையும் முதலமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *