ஜார்க்கண்டில் வாக்காளர் பெயர் நீக்கம் பாஜக மீது இந்தியா கூட்டணி குற்றச்சாட்டு – தேர்தல் ஆணையம் மறுப்பு

இணையவழி கையெழுத்து இயக்கம்

ராஞ்சி, செப். 6– ஜார்க்கண்டில் ‘படிவம் 7’அய் தவறாகப் பயன்படுத்தி, குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குமாறு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை (பிஎல்ஓ) பாஜக கட்டாயப்படுத்துவதாக இந்தியா கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த ஜூன் 30 முதல் ஜூலை 29 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்தப் பணிகளுக்கு முன்பாக 2.64 கோடியாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, வரைவுப் பட்டியல் வெளியானபோது 2.21 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது, சுமார் 43.61 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜே.எம்.எம் பொதுச்செயலாளர் வினோத் குமார் பாண்டே, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கேசவ் மஹ்தோ கம்லேஷ் மற்றும் ஆர்.ஜே.டி, சி.பி.அய் (எம்.எல்) லிபரேஷன் ஆகிய இந்தியா கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு, ஜார்க்கண்ட் மாநில தலைமை தேர்தல் அதிகாரி கே.ரவி குமாரைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தது.

அம்மனுவில், ஜார்க்கண்டின் பல மாவட்டங்களில் படிவம் 7-அய் பயன்படுத்தி தகுதிவாய்ந்த வாக்காளர் களின் பெயர்களை நீக்குமாறு பிஎல்ஓ-க்களுக்கு பாஜக தரப்பில் இருந்து அழுத்தம் தரப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து ஜார்க்கண்ட் தலைமை தேர்தல் அதிகாரி கே.ரவிகுமார் கூறுகையில், “வாக்காளர் பட்டியலைத் திருத்தும் அனைத்து நடைமுறைகளும் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுகின்றன. தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரின் பெயரையும் தன்னிச்சையாகவோ அல்லது தவறாகவோ நீக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *