சி.எஸ். மெட்ரிகுலேஷன் பள்ளியில் பெரியார் பிறந்த நாள் விழா மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா!

2 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

தஞ்சாவூர், செப்.26- தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் சி.எஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் ஆறாம் வகுப்பு முதல் +1 வரை யிலான மாணவர்களுக்கு தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி – வினாப் போட்டி நடத்தப்பட்டது.

ஒவ்வொரு வகுப்பு மாணவர் களுக்கும் தனித்தனியே பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி – வினாப் போட்டி என 15 வகுப்புகளின் மாணவர்களுக்கும் தனித்தனியே நடத்தப்பட்டன. மொத்தம் 262 மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு  பிரிவுக்கும் தலா 3 மாணவர்கள் என 127 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன

அனைவருக்கும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடுகள் சுமார் 10,000 மதிப்புள்ள புத்தகங்கள்,   பென்சில், பேனாக்களும் பரிசாக வழங்கப்பட்டன.

பெரியாரின் பெண் விடுதலையும் சுயமரியாதை இயக்கமும், பெரியார் காண விரும்பிய சமுதாய சமூகம், தந்தை பெரியாரும் அறிவியல் மனப்பான்மையும், தந்தை பெரியாரும் கல்வி உரிமையும், ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் சிந்தனை, சமூக நீதிக்காக போராடிய பெரியார் ஆகிய தலைப்புகளில் பேச்சுப் போட்டியின் கட்டளைப் போட்டியும் நடத்தப்பட்டன

மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு பேச்சுத் திறமையும், எழுத்துத் திறமையும், வினாடி-வினாப் போட்டியில் பதிலையும் சிறப்பாக சொல்லி தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

15-09-2026 செவ்வாய் முற்பகல் 11 மணி அளவில் சி.எஸ் மெட்ரிக் பள்ளிவிழா அரங்கத்தில் மாணவர் களுக்கான பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் பொறியாளர் சிவானந்தம் நிகழ்விற்கு தலைமை ஏற்றார்.

பள்ளியின் துணை முதல்வர் உலகநாதன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கழக தஞ்சை மாவட்டக் காப்பாளர் மு.அய்யனார் மாணவர்களுக்கான பரிசுகளை வழங்கி பாராட்டுரை வழங்கினார்.

கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

பள்ளியின் முதல்வர் ஆனந்தி மாணவர்களுக்கு வழங்கிய பாராட்டுரையில் “பள்ளியின் தாளாளர் சிவானந்தம் சிறுவயது முதல் தந்தை பெரியார் கொள்கையை வாழ்க்கையில் ஏற்றவர், கடைப் பிடிப்பவர் தான் ஜாதி மறுப்புத் திருமணத்தை செய்து கொண்டவர். தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் அனைவருக்கும் உணர்த்தக் கூடியவர். இன்றைய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களை சிறுவயதிலேயே தனது ஊருக்கு அழைத்து பொதுக்கூட்டம் நடத்தியவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக நமது பள்ளிக்கும் ஆசிரியர் வீரமணி அவர்களை அழைத்து பெருமைப்படுத்தியவர். அவரை முன்னுதாரணமாகக் கொண்டு நம் வாழ்க்கையை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மூடநம்பிக்கையிலிருந்து விடுபட்டு சுயமரியாதையுடன் ஜாதி மதங்களுக்கு ஆட்படாமல் சமத்துவத்துடன் மனித நேயத்துடன் வாழ வேண்டும் என்று எடுத்துரைத்தார்.

இறுதியாக ஆசிரியர் சாந்தி நன்றி கூறினார். நிகழ்ச்சி சிறப்பாக முடிவற்றது.

பள்ளி மாணவர்கள் இருவர் தந்தை பெரியார் வேடம் அணிந்து வந்து மேடையில் உரையாற்றினர். அவர்களுக்கு பள்ளித் தாளாளர் பொறியாளர் சிவானந்தம் அவர்கள் பாராட்டி சிறப்புச் செய்தார். நிகழ்ச்சியில் பொறியாளர் சிவானந்தத்தின் பேரன் சினேகன் பங்கேற்றுச் சிறப்பித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *